Skip to the text
பெரிய திருமொழி

8-2. தெள்ளியீர்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"தெள்ளியீர், தேவர்க்கும் தேவர், திருத்தக்கீர்" — மரியாதைப் பன்மையில் இறைவனை விளித்துப் பேசும் பதிகம். தெளிந்தவரே, தேவர்களுக்கும் தேவரே என்று அழைத்து, அவனுடைய நிலையை உயர்த்திச் சொல்கிறார். நெருக்கத்திற்கும் பணிவிற்கும் இடையே ஒரு நளினமான சமநிலையை இப்பதிகம் காட்டுகிறது.

பெரிய திருமொழி 8-2 - தெள்ளியீர்‌' (திருக்கண்ணபுரம்‌ 2 - தலைவியின்‌ நிலை கண்ட தாய்‌ தலைமகனை இயற்பழித்தும்‌, தலைமகளது இளமைக்கு இரங்கியும்‌ கூறிய பாசுரம்‌)

1658

தெள்ளியீர்‌! தேவர்க்கும்‌ தேவர்‌ திருத்தக்கீர்‌! வெள்ளியீர்‌! வெய்ய விழு நிதி வண்ணர்‌ ர்‌ ஓ! துள்ளு நீர்க்‌ கண்ணபுரம்‌ தொழுதாள்‌ இவள்‌ கள்வியோ! கை வளை கொள்வது தக்கதே?

1659

நீணிலா முற்றத்து நின்று இவள்‌ நோக்கினாள்‌ காணுமோ! கண்ணபுரம்‌ என்று காட்டினாள்‌ பாணனார்‌ திண்ணம்‌ இருக்க இனி இவள்‌ நாணுமோ? நன்று நன்று நறையூரர்க்கே

1660

அருவி சோர்‌ வேங்கடம்‌ நீர்மலை என்று வாய்‌ வெருவினாள்‌ மெய்யம்‌ வினவி இருக்கின்றாள்‌ பெருகு சீர்க்‌ கண்ணபுரம்‌ என்று பேசினாள்‌ உருகினாள்‌ உள்‌ மெலிந்தாள்‌ இது என்‌ கொலோ?

1661

உண்ணும்‌ நாள்‌ இல்லை உறக்கமும்‌ தான்‌ இல்லை பெண்மையும்‌ சால நிறைந்திலள்‌ பேதை தான்‌ கண்ணனூர்‌ கண்ணபுரம்‌ தொழும்‌ கார்க்கடல்‌ வண்ணர்‌ மேல்‌ எண்ணம்‌ இவட்கு இது என்‌ கொலோ?

1662

கண்ணனூர்‌ கண்ணபுரம்‌ தொழும்‌ காரிகை பெண்மையும்‌! தன்னுடை உண்மை உரைக்கின்றாள்‌ வெண்ணெய்‌ உண்டு ஆப்புண்ட வண்ணம்‌ விளம்பினாள்‌ வண்ணமும்‌ பொன்னிறம்‌ ஆவது ஒழியுமே

1663

வடவரை நின்றும்‌ வந்து இன்று கணபுரம்‌ இடவகை கொள்வது யாம்‌ என்று பேசினாள்‌ மடவரல்‌ மாதர்‌ என்‌ பேதை இவர்க்கு இவள்‌ கடவதென்‌? கண்‌ துயில்‌ இன்று இவர்‌ கொள்ளவே

1664

தரங்க நீர்‌ பேசினும்‌ தண்‌ மதி காயினும்‌ இஇரங்குமோ? எத்தனை நாள்‌ இருந்து எள்கினாள்‌? துரங்கம்‌ வாய்‌ கீண்டு உகந்தானது தொன்மையூர்‌ அரங்கமே என்பது இவள்‌ தனக்கு ஆசையே

1665

தொண்டெல்லாம்‌ நின்னடியே தொழுது உய்யுமா கண்டு தான்‌ கணபுரம்‌ கை தொழப்‌ போயினாள்‌ வண்டூுலாம்‌ கோதை என்‌ பேதை மணி நிறம்‌ கொண்டு தான்‌ கோயின்மை செய்வது தக்கதே?

1666

முள்ளெயிறு ஏய்ந்தில கூழை முடி கொடா தெள்ளியள்‌ என்பதோர்‌ தேசிலள்‌ என்‌ செய்கேன்‌? கள்ளவிழ்‌ சோலைக்‌ கணபுரம்‌ கை தொழும்‌ பிள்ளையை பிள்ளை என்றெண்ணப்‌ பெறுவரே?

1667

கார்மலி கண்ணபுரத்து எம்‌ அடிகளை பார்மலி மங்கையர்‌ கோன்‌ பரகாலன்‌ சொல்‌ சீர்மலி பாடல்‌ இவை பத்தும்‌ வல்லவர்‌ நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே

அடிவரவு: தெள்ளியீர்‌ நீணிலா அருவி உண்ணும்‌ கண்ணன்‌ வடவரை தரங்கம்‌ தொண்டு முள்‌ கார்‌ கரை