Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

2-5. பின்னைமணாளனை

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

"குழல் வாராய்" — கண்ணனின் கூந்தலை வாரிவிட அழைக்கும் பதிகம். ஒவ்வொரு பாசுரமும் அவன் யார் என்பதைச் சொல்லி முடிகிறது: நப்பின்னையின் மணாளன், திருப்பேரில் கண்வளர்பவன், பேயின் முலையுண்டவன், சகடத்தையும் மருதத்தையும் முறித்தவன், உலகை அளந்தவன். அத்தனைப் பெருமையையும் சொல்லிவிட்டு, "வந்து குழல் வாரிக்கொள்" என்று அழைக்கும் எளிமை இனிமையானது.

பெரியாழ்வார்‌ திருமொழி 2-5 பின்னைமணாளனை (கண்ணன்‌ குழல்‌ வாரக்‌ காக்கையை வாவெனல்‌)

162

பின்னை மணாளனைப்‌ பேரில்‌ கிடந்தானை முன்னை அமரர்‌ முதல்‌ தனி வித்தினை என்னையும்‌ எங்கள்‌ குடிமுழுது ஆட்கொண்ட மன்னனை வந்து குழல்வாராய்‌ அக்காக்காய்‌ மாதவன்‌ தன்‌ குழல்வாராய்‌ அக்காக்காய்‌

163

பேயின்‌ முலையுண்ட பிள்ளை இவன்‌ முன்னம்‌ மாயச்‌ சகடம்‌ மருதும்‌ இறுத்தவன்‌ காயாமலர்‌ வண்ணன்‌ கண்ணன்‌ கருங்குழல்‌ தூய்தாக வந்து குழல்வாராய்‌ அக்காக்காய்‌ தூமணி வண்ணன்‌ குழல்வாராய்‌ அக்காக்காய்‌

164

திண்ணக்‌ கலத்தில்‌ திரையுறி மேல்‌ வைத்த வெண்ணெய்‌ விழுங்கி விரைய உறங்கிடும்‌ அண்ணல்‌ அமரர்‌ பெருமானை ஆயர்‌ தம்‌ கண்ணனை வந்து குழல்வாராய்‌ அக்காக்காய்‌ கார்முகில்‌ வண்ணன்‌ குழல்வாராய்‌ அக்காக்காய்‌

165

பள்ளத்தில்‌ மேயும்‌ பறவை உருக்‌ கொண்டு கள்ள அசுரன்‌ வருவானைத்‌ தான்‌ கண்டு புள்ளிதுவென்று பொதுக்கோவாய்‌ கீண்டிட்ட பிள்ளையை வந்து குழல்வாராய்‌ அக்காக்காய்‌ பேய்முலை உண்டான்‌ குழல்வாராய்‌ அக்காக்காய்‌ க

166

கற்றினம்‌ மேய்த்துக்‌ கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்‌ திருமுடி உற்றன பேசி நீ ஓடித்‌ திரியாதே அற்றைக்கும்‌ வந்து குழல்வாராய்‌ அக்காக்காய்‌ ஆழியான்‌ தன்‌ குழல்வாராய்‌ அக்காக்காய்‌

167

கிழக்கில்‌ குடி மன்னர்‌ கேடிலாதாரை அழிப்பான்‌ நினைந்திட்டு அவ்வாழி அதனால்‌ விழிக்கும்‌ அளவிலே வேரறுத்தானை குழற்கு அணியாகக்‌ குழல்வாராய்‌ அக்காக்காய்‌ கோவிந்தன்‌ தன்‌ குழல்வாராய்‌ அக்காக்காய்‌

168

பிண்டத்‌ திரளையும்‌ பேய்க்கு இட்ட நீர்ச்‌ சோறும்‌ உண்டற்கு வேண்டி நீ ஓடித்‌ திரியாதே அண்டத்து அமரர்‌ பெருமான்‌ அழகமர்‌ வண்டொத்திருண்ட குழல்வாராய்‌ அக்காக்காய்‌ மாயவன்‌ தன்‌ குழல்வாராய்‌ அக்காக்காய்‌

169

உந்தி எழுந்த உருவமலர்‌ தன்னில்‌ சந்தச்‌ சதுமுகன்‌ தன்னைப்‌ படைத்தவன்‌ கொந்தக்‌ குழலைக்‌ குறந்து புளியட்டி தந்தத்தின்‌ சீப்பால்‌ குழல்வாராய்‌ அக்காக்காய்‌ தாமோதரன்‌ தன்‌ குழல்வாராய்‌ அக்காக்காய்‌

170

மன்னன்‌ தன்‌ தேவிமார்‌ கண்டு மகிழ்வெய்த முன்‌ இவ்வுலகினை முற்றும்‌ அளந்தவன்‌ பொன்னின்‌ முடியினைப்‌ பூவணணை மேல்‌ வைத்து பின்னேயிருந்து குழல்வாராய்‌ அக்காக்காய்‌ பேராயிரத்தான்‌ குழல்வாராய்‌ அக்காக்காய்‌

171

கண்டார்‌ பழியாமே அக்காக்காய்‌ கார்வண்ணன்‌ வண்டார்‌ குழல்‌ வார வாவென்ற ஆய்ச்சி சொல்‌ ர்‌ விண்தோய்‌ மதிள்‌ வில்லிபுத்தூர்க்‌ கோன்‌ பட்டன்‌ சொல்‌ கொண்டாயுப்‌ பாடக்‌ குறுகா வினைதாமே