செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த வங்கமலி தடங்கடலுள் அனந்தன் என்னும் வரியரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின் எங்குமலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை அங்கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
7-8. செங்கமலம்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடிகளை வருட, முனிவர் ஏத்த எழுந்தருளியிருக்கும் கோலத்தைப் பாடும் பதிகம். சேவை செய்யப்படுவதன் அமைதியான காட்சி இது. அவனைச் சூழ்ந்திருப்பவர் யாரென்பதே அவனுடைய பெருமையைச் சொல்லிவிடுகிறது.
பெரிய திருமொழி 7-8 - செங்கமலம் (திருவழுந்தூர் 4)
முன் இவ்வுலகேழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து பன்னுகலை நால் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய எம் பரமன் காண்மின் செந்நெல்மலி கதிர்க் கவரி வீசச் சங்கம் அவை முரலச் செங்கமல மலரை ஏறி அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதீ! என்ன நெஞ்சிடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின் மலைத்திகழ் சந்தகில் கனகமணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தொறும் மடைகள் பாய அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண்! குன்றம் திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி ஆகி இலங்கு புவி மடந்தை தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின் புலம்பு சிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
சினமேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின் ர இனமேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை யேய்வாய!! மரகதம் போல் கிளியின் இன்சொல் அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாணுருவாய் மூவடி மாவலியை வேண்டி தானமர ஏழுலகும் அளந்த வென்றித் தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் தேனமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதிச் 14! ஏய்வாய் செழுமாட மாளிகைகள் கூடந்தோறும் ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
பந்தணைந்த மெல்விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீதியங்காத இலங்கை வேந்தன் அந்தமில் திண்கரம் சிரங்கள் புரண்டு வீழ அடுகணையால் எய்துகந்த அம்மான் காண்மின் செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை! அனையவர்கள் செம்மை மிக்க அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
கும்பமிகு மத வேழம் குலையக் கொம்பு பறித்து மழ விடை அடர்த்துக் குரவை கோத்து வம்பவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டுகந்த மாயோன் காண்மின் செம்பவள மரதகம் நன்முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் அம்பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகார் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற நீடேறு பெருவலித் தோளுடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின் சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திருவிழவில் மணி அணிந்த திண்ணை தோறும் ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணியழுந்தூர் நின்ற கோவை கன்றி நெடுவேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலி செய்த இன்பப் பாடல் ஒன்றினொடு நான்கும் ஓரைந்தும் வல்லார் ஒலிகடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே
அடிவரவு: செங்கமலம் முன் குலம் சிலம்பு சினம் வானவர் பந்து கும்பம் !* திசைமுகனே ஊடேறு பன்றி கள்ளம்