Skip to the text
பெரிய திருமொழி

7-6. சிங்கமதாய்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

சிங்கமாய்த் தோன்றி அசுரனின் திறல்மிக்க ஆகத்தைக் கீண்டு உகந்தவனை, இடக்கையில் சங்கும் வலக்கையில் தழல் ஆழியும் ஏந்தியவனாக ஆழ்வார் காட்டும் பதிகம். ஆயுதங்களின் விவரிப்பே அவனது இயல்பைச் சொல்லிவிடுகிறது — அழைக்கும் சங்கும், காக்கும் ஆழியும். இரண்டும் ஒரே கைகளில் இருக்கின்றன.

பெரிய திருமொழி 7-6 - சிங்கமதாய்‌ (திருவழுந்தூர்‌ 2)

1598

சிங்கமதாய்‌ அவுணன்‌ திறலாகம்‌ முன்‌ கீண்டு உகந்த சங்கம்‌ இடத்தானைத்‌ தழல்‌ ஆழி வலத்தானை செங்கமலத்து அயன்‌ அனையார்‌ தென்னமுந்தையில்‌ மன்னி நின்ற அங்கமலக்‌ கண்ணனை அடியேன்‌ கண்டு கொண்டேனே

1599

கோவானார்‌ மடியக்‌ கொலையார்‌ மழுக்‌ கொண்டருளும்‌ மூவா வானவனை முழுநீர்‌ வண்ணனை அடியார்க்கு ஆஆ! என்றிரங்கித்‌ தென்னழுந்தையில்‌ மன்னி நின்ற தேவாதி தேவனை யான்‌ கண்டு கொண்டு திளைத்தேனே

1600

உடையானை ஒலிநீர்‌ உலகங்கள்‌ படைத்தானை விடையானோட அன்று விறலாழி விசைத்தானை அடையார்‌ தென்னிலங்கை அழித்தானை அணியழுந்தூர்‌ உடையானை அடியேன்‌ அடைந்து உய்ந்து போனேனே

1601

குன்றால்‌ மாரி தடுத்தவனைக்‌ குல வேழம்‌ அன்று பொன்றாமை அதனுக்கு அருள்‌ செய்த போரேற்றை அன்று ஆவின்‌ நறுநெய்‌ அமர்ந்துண்ண அணியழுந்தூர்‌ நின்றானை அடியேன்‌ கண்டு கொண்டு நிறைந்தேனே

1602

கஞ்சனைக்‌ காய்ந்தானைக்‌ கண்ணமங்கையுள்‌ நின்றானை வஞ்சனப்‌ பேய்‌ முலையூடு உயிர்‌ வாய்‌ மடூத்து உண்டானை செஞ்சொல்‌ நான்மறையோர்‌ தென்னமழுந்தையில்‌ மன்னி நின்ற அஞ்சனக்‌ குன்றம்‌ தன்னை அடியேன்‌ கண்டு கொண்டேனே

1603

பெரியானை அமரர்‌ தலைவற்கும்‌ பிரமனுக்கும்‌ உரியானை உகந்தான்‌ அவனுக்கும்‌ உணர்வதனுக்கு அரியானை அழுந்தூர்‌ மறையோர்கள்‌ அடிபணியும்‌ கரியானை அடியேன்‌ கண்டு கொண்டு களித்தேனே

1604

திருவாழ்‌ மார்வன்‌ தன்னைத்‌ திசை மண்‌ நீர்‌ எரி முதலா உருவாய்‌ நின்றவனை ஒலி சேரும்‌ மாருதத்தை அருவாய்‌ நின்றவனைத்‌ தென்னமுந்தையில்‌ மன்னி நின்ற கருவார்‌ கற்பகத்தைக்‌ கண்டு கொண்டு களித்தேனே

1605

நிலையாளாக என்னை உகந்தானை நிலமகள்‌ தன்‌ முலையாள்‌ வித்தகனை முது நான்மறை வீதி தொறும்‌ அலையாரும்‌! கடல்‌ போல்‌ முழங்கும்‌ தென்னழுந்தையில்‌! மன்னி நின்ற கலையார்‌ சொற்பொருளைக்‌ கண்டு கொண்டு களித்தேனே

1606

பேரானைக்‌ குடந்தைப்‌ பெருமானை இலங்கொளி சேர்‌ !37 அலையார்‌ வாரார்‌ வனமுலையாள்‌ மலர்‌ மங்கை நாயகனை ஆரா இன்னமுதைத்‌ தென்னமுந்தையில்‌ மன்னி நின்ற காரார்‌ கருமுகிலைக்‌ கண்டு கொண்டு களித்தேனே

1607

திறல்‌ முருகனனையார்‌ தென்னமுந்தையில்‌ மன்னி நின்ற அறமுதல்வன்‌ அவனை அணி ஆலியர்‌ கோன்‌ மருவார்‌ கறை நெடுவேல்‌ வலவன்‌ கலிகன்றி சொல்‌ ஐயிரண்டும்‌ முறை வழுவாமை வல்லார்‌ முழுதாள்வர்‌ வானுலகே

அடிவரவு: சிங்கமது கோ உடையானை குன்றால்‌ கஞ்சனை பெரியானை திருவாழ்‌ நிலை பேரானை திறல்‌ திரு