கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை மண் சேர முலை உண்ட மாமதலாய்! வானவர் தம் கோவே! என்று விண் சேரும் இளந்திங்கள் அகரூரிஞ்சு மணி மாட மல்கு செல்வத் தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே
7-4. கண் சோர"!
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
கண் சோர வெங்குருதி வழிய, நெருப்புப் போன்ற கூந்தலுடைய பேய்ச்சி மண்ணில் விழுமாறு அவள் முலையுண்ட மாமதலையைப் பாடும் பதிகம். கொடிய ஆபத்து ஒரு குழந்தையின் பசியால் முடிவுக்கு வந்ததை ஆழ்வார் சொல்கிறார். வலிமையின் காட்சியில்கூட அவன் குழந்தையாகவே இருக்கிறான் என்பது இப்பதிகத்தின் வியப்பு.
பெரிய திருமொழி 7-4 - கண் சோர"! (திருச்சேறை)
அம்புருவ வரி நெடூங்கண் அலர் மகளை வரை அகலத்தமர்ந்து மல்லல் கொம்புருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம் ர வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே
மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளை காதோடு கொடு மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா! என்று நின்று தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்தி போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே
தேராளும் வாள் அரக்கன் தென் இலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ போராளும் சிலை அதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும் தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பர் ஆளும் பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் !3! இது கோவில் திருமொழி வல்லமணர் தமக்கும் அல்லேன் முந்திச் சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கல்லால் சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே
பண்டு ஏனமாய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணையிலேன் சொல்லுகின்றேன் வண்டேந்தும் மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மை கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண்ணிணையும் களிக்குமாறே
பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா! என்றும் மைவிரியும் மணி வரை போல் மாயவனே! என்றென்றும் வண்டார் நீலம் செய்விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடியைச்! சிந்தித்தேற்கு என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே
உண்ணாது வெங்கூற்றம் ஓவாத"? பாவங்கள் சேரா மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும் மென்தளிர் போல் அடியினானை பண்ணார வண்டு இயம்பும் பைம்பொழில் சூழ் தண் சேறை அம்மான் தன்னை கண்ணாரக் கண்டூருகிக்' கையாரத் தொழுவாரைக் கருதுங்காலே
கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதொருகால்! கவலை என்னும் வெள்ளத்தேற்கு என் கொலோ? விளை வயலுள் திருவடிவை ஓவாது !1 கண்டிறைஞ்சி நீலம் களைஞர் தாளால் தள்ள தேன் மண நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என் உள்ளம் உருகுமாறே
பூமாண் சேர் கருங்குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடூ அன்னம் தேமாவின் இன்னிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை வாமான் தேர்ப் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்! தூமாண் சேர் பொன்னடி மேல் சூட்டூமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே
அடிவரவு: கண் அம்பு மீதோடி தேராளும் வந்திக்கும் பண்டு பைவிரியும் உண்ணாது கள்ளத்தேன் பூமாண் தந்தை