கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய ர கடந்த நம்பி கடியார் இலங்கை உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே
6-10. கிடந்த
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
குடந்தையில் கண்வளரும் நம்பியையும், கேழலாய் உலகை இடந்தெடுத்த நம்பியையும் ஒரே மூச்சில் அழைக்கும் பதிகம். "எங்கள் நம்பி" என்று உரிமையுடன் சொல்வதே இப்பதிகத்தின் சுவை. படுத்திருப்பவனும் பாய்ந்து காப்பவனும் ஒருவனே என்பது மீண்டும் நிலைநாட்டப்படுகிறது. ஆறாம் பத்து இந்த நெருக்கத்துடன் நிறைவடைகிறது.
பெரிய திருமொழி 6-10 - கிடந்த (திருநறையூர் 7)
விடம் தான் உடைய அரவம் வெருவச் செருவில் முன நாள் முன் தடம் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன் ர இடந்தான் வையம் கேழலாகி உலகை ஈரடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே
பூணாது அனலும் தறு கண் வேழம் மறுக வளை மருப்பை பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திருமார்வன் ர பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே
கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் ் இலங்கைக் கோன் வல்லாள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை அடையா அரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா உண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும் தேனும் பாலும் அழுதுமாய திருமால் திருநாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இருநிலனும் ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார் குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம் நன்று காண்மின் தொண்டீர்! சொன்னேன் நமோ நாராயணமே
கடங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கென்று படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் நெ௫டூங்கால் குன்றம் குடை ஒன்றேந்தி நிரையைச் சிரமத்தால் நடூங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை நிலமா மகள் மலர்மா மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திருநாமம் நங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நாராயணமே
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை ர காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே
அடிவரவு: கிடந்த விடம் பூணாது கல் குடை கானம் நின்ற கடூங்கால் பொங்கு வாவி கறவா