Skip to the text
பெரிய திருமொழி

6-9. பெடை அடர்த்த!

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

தன் பேடையைப் பிரியாத அன்னமும், மடல் விரித்துத் தேன் உண்ணும் தாமரையும் நிறைந்த வயல்சூழ் தலத்தைப் பாடும் பதிகம். இயற்கையின் இணைபிரியாத் தன்மையை முன்வைத்து, அத்தலத்தின் அமைதியை ஆழ்வார் காட்டுகிறார். சேர்ந்திருத்தலே அவ்விடத்தின் இயல்பாகச் சித்திரிக்கப்படுகிறது.

பெரிய திருமொழி 6-9 - பெடை அடர்த்த! (திருநறையூர்‌ 6)

1528

பெடை அடர்த்த மடவன்னம்‌ பிரியாது மலர்க்‌ கமலம்‌ மடல்‌ எடுத்து மது நுகரும்‌ வயல்‌ உடுத்த திருநறையூர்‌ முடை அடர்த்த சிரம்‌ ஏந்தி மூவுலகும்‌ பலி திரிவோன்‌ இடர்‌ கெடுத்த திருவாளன்‌ இணையடியே அடை நெஞ்சே!

1529

கழியாரும்‌ கனசங்கம்‌ கலந்து எங்கும்‌ நிறைந்தேறி வழியார முத்தீன்று வளங்கொடுக்கும்‌ திருநறையூர்‌ பழியாரும்‌ விறல்‌ அரக்கன்‌ பருமுடிகள்‌ அவை சிதற அழலாறும்‌ சரம்‌ துரந்தான்‌ அடியிணையே அடை நெஞ்சே!

1530

சுளை கொண்ட பலங்கனிகள்‌ தேன்‌ பாய கதலிகளின்‌ திளை கொண்ட பழம்‌ கெழுழு திகழ்‌ சோலைத்‌ திருநறையூர்‌ வளை கொண்ட வண்ணத்தன்‌ பின்‌ தோன்றல்‌ மூவுலகோடு அளை வெண்ணெய்‌ உண்டான்‌ தன்‌ அடியிணையே அடை நெஞ்சே!

1531

துன்றோளித்‌ துகிற்படலம்‌ துன்னி எங்கும்‌ மாளிகை மேல்‌ நின்றார வான்‌ மூடும்‌ நீள்‌ செல்வத்‌ திருநறையூர்‌ மன்றாரக்‌ குடமாடி வரை எடுத்து மழை தடுத்த குன்றாரும்‌ திரள்‌ தோளன்‌ குரைகழலே அடை நெஞ்சே!

1532

அகிற்‌ குறடும்‌ சந்தனமும்‌ அம்பொன்னும்‌ அணிமுத்தும்‌ மிகக்‌ கொணர்ந்து திரை உந்தும்‌ வியன்‌ பொன்னித்‌ திருநறையூர்‌ பகல்‌ கரந்த சுடராழிப்‌ படையான்‌ இவ்வுலகேழும்‌ புகக்‌ கரந்த திருவயிற்றன்‌ பொன்னடியே அடை நெஞ்சே!

1533

பொன்முத்தும்‌ அரியுகிரும்‌ புழைக்‌ கைம்மா கரிக்கோடும்‌ மின்னத்‌ தண்‌ திரை உந்தும்‌ வியன்‌ பொன்னித்‌ திருநறையூர்‌ மின்னொத்த நுண்மருங்குல்‌ மெல்லியலை திருமார்பில்‌ மன்னத்‌ தான்‌ வைத்துகந்தான்‌ மலரடியே அடை நெஞ்சே!

1534

சீர்‌ தழைத்த கதிர்ச்‌ செந்நெல்‌ செங்கமலத்து இடையிடையின்‌ பார்‌ தழைத்துக்‌ கரும்போங்கிப்‌ பயன்‌ விளைக்கும்‌ திருநறையூர்‌ கார்‌ தழைத்த திரு உருவன்‌ கண்ண பிரான்‌ விண்ணவர்‌ கோன்‌ தார்‌ தழைத்த துழாய்‌ முடியன்‌ தளிரடியே அடை நெஞ்சே!

1535

குலையார்ந்த பழுக்காயும்‌ பசுங்காயும்‌ பாளை முத்தும்‌ தலையார்ந்த இளங்கமுகின்‌ தடஞ்சோலைத்‌ திருநறையூர்‌ மலையார்ந்த கோலம்‌ சேர்‌ மணிமாடம்‌ மிக மன்னி நிலையார நின்றான்‌ தன்‌ நீள்கழலே அடை நெஞ்சே!

1536

மறையாரும்‌ பெருவேள்விக்‌ கொழும்‌ புகை போய்‌ வளர்ந்து எங்கும்‌ நிறையார வான்‌ மூடும்‌ நீள்செல்வத்‌ திருநறையூர்‌ பிறையாரும்‌ சடையானும்‌ பிரமனும்‌ முன்‌ தொழுதேத்த இஇறையாகி நின்றான்‌ தன்‌ இணையடியே அடை நெஞ்சே!

1537

திண்களக மதிள்‌ புடை சூழ்‌ திருநறையூர்‌ நின்றானை வண்களக நிலவெறிக்கும்‌ வயல்‌ மங்கை நகராளன்‌ பண்களகம்‌ பயின்ற சீர்ப்‌ பாடல்‌ இவை பத்தும்‌ வல்லார்‌ விண்களகத்து இமையவராய்‌ வீற்றிருந்து வாழ்வாரே

அடிவரவு: பெடை கழி சுளை துன்று அகில்‌ பொன்‌ சீர்‌ குலை மறை திண்‌ கிடந்த