Skip to the text
பெரிய திருமொழி

6-8. மான்கொண்ட

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

மான்தோல் அணிந்த மாணியாய்ச் சென்று, மாவலியிடம் மண் பெற்று, தாளால் உலகை அளந்த பெருமானைப் பாடும் பதிகம். சிறுவனாய்ச் சென்று உலகளந்தவனின் கதை மீண்டும் இங்கே வருகிறது. ஒவ்வொரு முறையும் அது புதிதாகவே ஆழ்வாருக்குத் தோன்றுகிறது.

பெரிய திருமொழி 6-8 - மான்கொண்ட (திருநறையூர்‌ 5)

1518

மான்‌ கொண்ட தோல்‌ மார்வின்‌ மாணியாய்‌ மாவலி மண்‌ தான்‌ கொண்டு தாளால்‌ அளந்த பெருமானை தேன்‌ கொண்ட சாரல்‌ திருவேங்கடத்தானை நான்‌ சென்று நாடி நறையூரில்‌ கண்டேனே

1519

முந்நீரை முன்னாள்‌ கடைந்தானை மூழ்த்த நாள்‌ அந்நீரை மீனாய்‌ அமைத்த பெருமானை தென்னாலி மேய திருமாலை எம்மானை நன்னீர்‌ வயல்‌ சூழ்‌ நறையூரில்‌ கண்டேனே

1520

தூவாய புள்‌ ஊர்ந்து வந்து துறை வேழம்‌ மூவாமை நல்கி முதலை துணித்தானை தேவாதி தேவனைச்‌ செங்கமலக்‌ கண்ணானை நாவாயுளானை நறையூரில்‌ கண்டேனே

1521

ஓடா அரியாய்‌ இரணியனை ஊன்‌ இடந்த சேடார்‌ பொழில்‌ சூழ்‌ திருநீர்மலையானை ர்‌ வாடா மலர்த்‌ துழாய்‌ மாலை முடியானை நாள்‌ தோறும்‌ நாடி நறையூரில்‌ கண்டேனே

1522

கல்லார்‌ மதிள்‌ சூழ்‌ கடி இலங்கைக்‌ கார்‌ அரக்கன்‌ வல்லாகம்‌ கீள வரி வெஞ்சரம்‌ துரந்த வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை நாடி நறையூரில்‌ கண்டேனே

1523

உம்பர்‌ உலகோடு உயிர்‌ எல்லாம்‌ உந்தியில்‌ வம்பு மலர்‌ மேல்‌ படைத்தானை மாயோனை அம்பன்ன கண்ணாள்‌ அசோதை தன்‌ சிங்கத்தை நம்பனை நாடி நறையூரில்‌ கண்டேனே

1524

கட்டேறு நீள்‌ சோலைக்‌ காண்டவத்தைத்‌ தீமூட்டி விட்டானை மெய்யம்‌ அமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய்‌ வண்‌ துவரை நட்டானை நாடி நறையூரில்‌ கண்டேனே

1525

மண்ணின்மீ பாரம்‌ கெடுப்பான்‌ மற மன்னர்‌ பண்ணின்‌ மேல்‌ வந்த படை எல்லாம்‌ பாரதத்து விண்ணின்‌ மீதேற விசயன்‌ தேர்‌ ஊர்ந்தானை நண்ணி நான்‌ நாடி நறையூரில்‌ கண்டேனே

1526

பொங்கேறு நீள்‌ சோதிப்‌ ர பொன்னாழி தன்னோடும்‌ சங்கேறு கோலத்‌ தடக்கைப்‌ பெருமானை கொங்கேறு சோலைக்‌ குடந்தைக்‌ கிடந்தானை நங்கோனை நாடி நறையூரில்‌ கண்டேனே

1527

மன்னு மதுரை வசுதேவர்‌ வாழ்‌ முதலை நன்னறையூர்‌ நின்ற நம்பியை வம்பவிழ்தார்க்‌ கன்னவிலும்‌ தோளான்‌ கலியன்‌ ஒலி வல்லார்‌ பொன்னுலகில்‌ வானவர்க்குப்‌ புத்தேளிர்‌ ஆகுவரே

அடிவரவு: மான்‌ முந்நீரை தூவாய ஓடா கல்லார்‌ உம்பர்‌ கட்டேறு மண்ணின்‌ பொங்கு மன்னு பெடை