அம்பரமும் பெருநிலனும் திசைகள் எட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வட மரத்தின் இலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்! வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
6-6. அம்பரமும்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
வானமும், பெருநிலனும், எட்டுத் திசைகளும், அலைகடலும், குலமலைகளும் — அனைத்தையும் உண்ட கண்டனைப் பாடும் பதிகம். ஊழிக்காலத்தில் எல்லாவற்றையும் தன்னுள் ஏற்றுக்கொள்பவனே, அவற்றைப் பின் மீண்டும் வெளிப்படுத்துகிறான். அழிவு என்பது அவனுக்கு முடிவல்ல, பாதுகாப்பு என்பதே இதன் உட்பொருள்.
பெரிய திருமொழி 6-6 - அம்பரமும் (திருநறையூர் 3)
கொழுங்கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி அண்டத்தப்பால் எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணையடிக் கீழ் இனிது இருப்பீர்! இனவண்டாலும் உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள செழும் பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
பவ்வ நீருடை ஆடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான் பால் செல்லகிற்பீர் கவ்வை மாகளிறு உந்தி வெண்ணியேற்ற! கழல் மன்னர் மணி முடி மேல் காகம் ஏற தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
பைங்கணாள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பருவரைத்! தோள் இரணியனைப் பற்றி வாங்கி அங்கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக் கீழ் நிற்பீர்! வெங்கண் மாகளிறு உந்தி வெண்ணியேற்ற!' விறல் மன்னர் திறல் அழிய வெம்மா உய்த்த செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
அன்று உலக மூன்றினையும் அளந்து வேறோர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு வென்று அவனை விண்ணுலகில் செல உய்த்தாற்கு ! விண்ணியேற்ற பருவரத் விருந்தாவீர்! மேலெழுந்து விலங்கல் பாய்ந்து பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய் தன்னாலே தானுருவின் மூர்த்தி மூன்றாய்த் தானாயன் ஆயினான் சரண் என்று உய்வீர்! மின்னாடு வேலேந்து விளைந்த! வேளை விண்ணேறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முதுது வரைக் குலபதியாக் காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்தகிற்பீர்! ர மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன் சிலைத் தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
மூருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன் அவியச் சென்று வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்! இருக்கிலங்கு திருமொழி வாய் எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்! பாராளர் இவரிவர்! என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் 3! அவரிவர் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
செம்மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை பொய்ம்மொழி ஒன்றில்லாத மெய்ம்மையாளன் புலமங்கைக் குலவேந்தன் புலமை ஆர்ந்த அம்மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல் பாடூவார் வியன் உலகில் நமனார் பாடி வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே
அடிவரவு: அம்பரம் கொழு பவ்வம் பைங்கண் அன்று தன்னாலே முலை முருக்கு தாராளன் செம்மொழி ஆளும்