கண்ணும் சுழன்று பளையோடு ஈளை வந்து ஏங்கினால் பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத மூன் விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான் நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே!
6-4. கண்ணும்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
கண் சுழன்று, இளைப்பும் இருமலும் வந்து, இளையவர் "மெல்ல நடவும்" என்று சொல்லும் நிலையை வருணிக்கும் பதிகம். முதுமையின் அவமானத்தையும் தனிமையையும் ஆழ்வார் மறைக்காமல் சொல்கிறார். அந்நிலை வருவதற்கு முன் செய்யத் தக்கது ஒன்றே என்பதை அமைதியாக நினைவூட்டுகிறார்.
பெரிய திருமொழி 6-4 - கண்ணும் (திருநறையூர் 1)
கொங்குண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர் இங்கென்? இருமி எம்பால் வந்ததென்று இகழாத மூன் திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே!
கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை எங்கோலம் ஐயா! என்? இனிக் காண்பது என்னாத முன் செங்கோல் வலவன்! தான் பணிந்து ஏத்தித் திகழுமூர் நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே!
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண்ணேரிடை வம்புண் குழலார் வாசல் அடைத்து இகழாத முன் ர செம்பொன் கமுகினம் தான் கனியும் செழும் சோலை சூழ் நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே!
விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண் சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழாத முன் மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே!
மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து என் நீர் இருமி எம்பால் வந்தது? என்று இகழாத மூன் தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி ஊட்டினான் நன்னீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே! 6 !5 வளவன்
வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன் பொல்லான் திரைந்தான் என்னும் புறனுறை கேட்பதன் முன் சொல்லார் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர் நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே!
வாளொண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மை கேண்மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே!
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட குனி சேர்ந்துடலம் கோலில் தளர்ந்து இளையாத மூன் பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம் நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே!
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாத முன் நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே! என்ற கறையார் நெடு வேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு ஆவரே
அடிவரவு: கண்ணும் கொங்குண் கொங்கார் கொம்பு விலங்கு மின் வில் வாள் கனி பிறை கலங்க