Skip to the text
பெரிய திருமொழி

6-2. பொறுத்தேன்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"பொறுத்தேன், இறுத்தேன்" — தன் வாழ்வில் விட்டுவிட்டவற்றை ஆழ்வார் ஒப்புக்கொள்ளும் பதிகம். பொருளும் இன்பமும் என்ற இரண்டையும் முறித்து, ஐம்புலன்களுக்கு இடமான வாழ்வை விலக்கியதைச் சொல்கிறார். துறவை ஒரு சாதனையாக அல்ல, ஒரு நிம்மதியாகவே அவர் பேசுகிறார்.

பெரிய திருமொழி 6-2 - பொறுத்தேன்‌ (திருவிண்ணகர்‌ 32)

1458

பொறுத்தேன்‌ புன்சொல்‌ நெஞ்சில்‌ பொருள்‌ இன்பம்‌ என இரண்டும்‌ இறுத்தேன்‌ ஐம்புலன்கட்கிடனாயின வாயிலொட்டி அறுத்தேன்‌ ஆர்வச்‌ செற்றம்‌ அவை தன்னை! மனத்தகற்றி வெறுத்தேன்‌ நின்னடைந்தேன்‌ திருவிண்ணகர்‌ மேயவனே!

1459

மறந்தேன்‌ உன்னை முன்னம்‌ மறந்த மதியில்‌ மனத்தால்‌ இறந்தேன்‌ எத்தனையும்‌ அதனால்‌ இடூம்பைக்‌ குழியில்‌ ர்‌ பிறந்தே எய்த்து ஒழிந்தேன்‌ பெருமான்‌! திருமார்பா! சிறந்தேன்‌ நின்னடிக்கே திருவிண்ணகர்‌ மேயவனே!

1460

மானேய்‌ நோக்கியர்‌ தம்‌ வயிற்றுக்‌ குழியில்‌ உழைக்கும்‌ ஊனேர்‌'' ஆக்கை தன்னை உதவாமை உணர்ந்து உணர்ந்து வானே! மாநிலமே! வந்து வந்து என்‌ மனத்து இருந்த தேனே! நின்னடைந்தேன்‌ திருவிண்ணகர்‌ மேயவனே!

1461

பிறிந்தேன்‌ பெற்ற மக்கள்‌ பெண்டிர்‌ என்றிவர்‌ பின்‌ உதவாது அறிந்தேன்‌ நீ பணித்த அருள்‌ என்னும்‌ ஒள்‌ வாள்‌ உருவி எறிந்தேன்‌ ஐம்புலன்கள்‌ இடர்‌ தீர எறிந்து வந்து செறிந்தேன்‌ நின்னடிக்கே!! திருவிண்ணகர்‌ மேயவனே!

1462

பாண்‌ தேன்‌ வண்டறையும்‌ குழலார்கள்‌ பல்லாண்டு இசைப்ப ஆண்டார்‌ வையம்‌ எல்லாம்‌ அரசாகி முன்‌ ஆண்டவரே மாண்டார்‌ என்று வந்தார்‌ அந்தோ! மனை வாழ்க்கை தன்னை வேண்டேன்‌ நின்னடைந்தேன்‌ திருவிண்ணகர்‌ மேயவனே! 5 !! தம்மை !! ஊனேய்‌

1463

கல்லா ஐம்புலன்கள்‌ அவை கண்டவாறு செய்யகில்லேன்‌ மல்லா! மல்லமருள்‌ மல்லர்‌ மாள மல்லடர்த்த மல்லா! மல்லலம்‌ சீர்‌ மதிள்‌ நீர்‌ இலங்கை அழித்த வில்லா! நின்னடைந்தேன்‌ திருவிண்ணகர்‌ மேயவனே!

1464

வேறா யான்‌ இரந்தேன்‌ வெகுளாது மனக்கொள்‌ எந்தாய்‌! ஆறா வெந்நரகத்து அடியேனை இடக்‌ கருதி கூறா ஐவர்‌ வந்து குமைக்கக்‌ குடி விட்டவரை தேறாது உன்னடைந்தேன்‌ திருவிண்ணகர்‌ மேயவனே!

1465

தீவாய்‌ வல்வினையார்‌ உடன்‌ நின்று சிறந்தவர்‌ போல்‌ மேவா வெந்நரகத்து இடவுற்று! விரைந்து வந்தார்‌ மூவா வானவர்‌ தம்‌ முதல்வா! மதி கோள்‌ விடுத்த தேவா! நின்னடைந்தேன்‌ திருவிண்ணகர்‌ மேயவனே!

1466

போதார்‌ தாமரையாள்‌ புலவிக்‌ குலவானவர்‌ தம்‌ கோதா! கோதில்‌ செங்கோல்‌ குடை மன்னர்‌ இடை நடந்த தூதா! தூமொழியாய்‌! சுடர்‌ போல்‌ என்‌ மனத்திருந்த வேதா! நின்னடைந்தேன்‌ திருவிண்ணகர்‌ மேயவனே!

1467

தேனார்‌ பூம்‌ புறவில்‌ திருவிண்ணகர்‌ மேயவனை வானாரும்‌ மதிள்‌ சூழ்‌ வயல்‌ மங்கையர்‌ கோன்‌ மருவார்‌ ர ஊனார்‌ வேல்‌ கலியன்‌ ஒலி செய்‌ தமிழ்‌ மாலை வல்லார்‌ கோனாய்‌ வானவர்‌ தம்‌ கொடு மாநகர்‌ கூடூவரே

அடிவரவு: பொறுத்தேன்‌ மறந்தேன்‌ மானேய்‌ பிறிந்தேன்‌ பாண்‌ கல்லா வேறா தீவாய்‌ போதார்‌ தேனார்‌ துறப்பேன்‌