Skip to the text
பெரிய திருமொழி

6-1. வண்டூணு

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

வண்டு உண்ணும் நறுமலர் மாலையை ஏந்தி, "பழவினை கெடுக" என்று தொண்டரும் அமரரும் அவன் அடிமேல் பணியும் காட்சியில் தொடங்கும் பதிகம். மனிதரும் தேவரும் ஒரே வேண்டுதலுடன் ஒரே இடத்தில் நிற்பதை ஆழ்வார் காட்டுகிறார். வழிபாட்டில் உயர்வு தாழ்வு அழிந்துபோகும் தன்மை இங்கே அமைதியாகச் சொல்லப்படுகிறது.

பெரிய திருமொழி 6-1 - வண்டூணு (திருவிண்ணகர்‌ 1)

1448

வண்டுணு நறுமலர்‌ இண்டை கொண்டு பண்டை நம்‌ வினை கெட என்று அடி மேல்‌ தொண்டரும்‌ அமரரும்‌ பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம்‌ அளந்தவனே! ஆண்டாய்‌! உனைக்‌ காண்பதோர்‌ அருள்‌ எனக்கு அருளுதியேல்‌ வேண்டேன்‌ மனை வாழ்க்கையை விண்ணகர்‌ மேயவனே!

1449

அண்ணல்‌ செய்து அலை கடல்‌ கடைந்து அதனுள்‌ கண்ணுதல்‌ நஞ்சுண்ணக்‌ கண்டவனே! விண்ணவர்‌ அமுதுண அமுதில்‌ வரும்‌ பெண்ணமுது உண்ட எம்பெருமானே! ஆண்டாய்‌! உனைக்‌ காண்பதோர்‌ அருள்‌ எனக்கு அருளுதியேல்‌ வேண்டேன்‌ மனை வாழ்க்கையை விண்ணகர்‌ மேயவனே!

1450

குழல்‌ நிற வண்ண! நின்‌ கூறு கொண்ட தழல்‌ நிற வண்ணன்‌ நண்ணார்‌ நகரம்‌ விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல்‌ நிற அம்பதுவானவனே! ஆண்டாய்‌! உனைக்‌ காண்பதோர்‌ அருள்‌ எனக்கு அருளுதியேல்‌ வேண்டேன்‌ மனை வாழ்க்கையை விண்ணகர்‌ மேயவனே!

1451

நிலவொடு வெயில்‌ நில இரு சுடரும்‌ உலகமும்‌ உயிர்களும்‌! உண்டு ஒரு கால்‌ கலை தரு குழவியின்‌ உர வினையாய்‌ அலைகடல்‌ ஆலிலை வளர்ந்தவனே! ஆண்டாய்‌! உனைக்‌ காண்பதோர்‌ அருள்‌ எனக்கு அருளுதியேல்‌ வேண்டேன்‌ மனை வாழ்க்கையை விண்ணகர்‌ மேயவனே!

1452

பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்‌ சீர்கெழும்‌ இவ்வுலகேழும்‌ எல்லாம்‌ ஆர்கெழு வயிற்றினில்‌ அடக்கி நின்று அங்கு ஓரெழுத்து ஓஒருருவானவனே! ஆண்டாய்‌! உனைக்‌ காண்பதோர்‌ அருள்‌ எனக்கு அருளுதியேல்‌ வேண்டேன்‌ மனை வாழ்க்கையை விண்ணகர்‌ மேயவனே!

1453

கார்கெழு கடல்களும்‌ மலைகளுமாய்‌ ஏர்கெழும்‌ உலகமுமாகி முத லார்களும்‌ அறிவரு நிலையினையாய்ச்‌ சீர்கெழு நான்மறை ஆனவனே! ர ஆண்டாய்‌! உனைக்‌ காண்பதோர்‌ அருள்‌ எனக்கு அருளுதியேல்‌ வேண்டேன்‌ மனை வாழ்க்கையை விண்ணகர்‌ மேயவனே!

1454

உருக்குறு நறுநெய்‌ கொண்டு ஆரழலில்‌ இருக்குறும்‌ அந்தணர்‌ சந்தியின்‌ வாய்‌ பெருக்கமொடு அமரர்கள்‌ அமர நல்கும்‌ இருக்கினில்‌ இன்னிசை ஆனவனே! ஆண்டாய்‌! உனைக்‌ காண்பதோர்‌ அருள்‌ எனக்கு அருளுதியேல்‌ வேண்டேன்‌ மனை வாழ்க்கையை விண்ணகர்‌ மேயவனே!

1455

காதல்‌ செய்து இளையவர்‌ கலவி தரும்‌ வேதனை வினையது வெருவுதலாம்‌ ஆதலின்‌ உனதடு அணுகுவன்‌ நான்‌ போதலார்‌ நெடு முடிப்‌ புண்ணியனே! ஆண்டாய்‌! உனைக்‌ காண்பதோர்‌ அருள்‌ எனக்கு அருளுதியேல்‌ வேண்டேன்‌ மனை வாழ்க்கையை விண்ணகர்‌ மேயவனே!

1456

சாதலும்‌ பிறத்தலும்‌ என்று இவற்றைக்‌ காதல்‌ செய்யாது உன கழல்‌ அடைந்தேன்‌ ஓதல்‌ செய்‌ நான்மறையாகி உம்பர்‌ ஆதல்‌ செய்‌ மூவுருவானவனே! ஆண்டாய்‌! உனைக்‌ காண்பதோர்‌ அருள்‌ எனக்கு அருளுதியேல்‌ வேண்டேன்‌ மனை வாழ்க்கையை விண்ணகர்‌ மேயவனே! 9 !16 உமிரும்‌

1457

பூமரு பொழில்‌ அணி விண்ணகர்‌ மேல்‌ காமரு சீர்க்‌ கலி கன்றி சொன்ன பாமரு தமிழ்‌ இவை பாட வல்லார்‌ வாமனன்‌ அடி இணை மருவுவரே

அடிவரவு: வண்டு அண்ணல்‌ குழல்‌ நிலவோடு பார்‌ கார்‌ உருக்குறு காதல்‌ சாதல்‌ பூமரு பொறுத்தேன்‌