Skip to the text
பெரிய திருமொழி

5-10. தீதறு

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

நிலம், தீ, காற்று, நீர், விசும்பு ஆகிய ஐம்பூதங்களும், மனமும், உறக்கமும், இறப்பும் அவனேயாக இருப்பதைச் சொல்லும் பதிகம். வெளியுலகும் உள்ளுலகும், விழிப்பும் உறக்கமும் அவனுக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஐந்தாம் பத்து இந்த முழுமையான வியாபகக் காட்சியுடன் நிறைவடைகிறது.

பெரிய திருமொழி 5-10 - தீதறு (திருநந்திபுர விண்ணகரம்‌)

1438

தீதறு நிலத்தொடு எரி காலினொடு நீர்கெழு விசும்பும்‌ அவையாய்‌ மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவையாய பெருமான்‌ தாய்‌ செற!! உளைந்து தயிர்‌ உண்டு குடமாடு தடமார்வர்‌ தகை சேர்‌ நாதன்‌ உறைகின்ற நகர்‌ நந்திபுர விண்ணகரம்‌ நண்ணு மனமே!

1439

உய்யும்‌ வகையுண்டு சொன செய்யில்‌ உலகேழும்‌ ஒழியாமை முன நாள்‌ மெய்யின்‌ அளவே அமுது செய்ய வல ஐயன்‌ அவன்‌ மேவு நகர்‌ தான்‌ மைய வரிவண்டு மது உண்டு கிளையோடு மலர்‌ கிண்டி அதன்‌ மேல்‌ நைவளம்‌ நவிற்று பொழில்‌ நந்திபுர விண்ணகரம்‌ நண்ணு மனமே!

1440

உம்பர்‌ உலகேழு கடல்‌ ஏழு மலை ஏழும்‌ ஒழியாமை முன நாள்‌ தம்பொன்‌ வயிறாரளவும்‌ உண்டு அவை உமிழ்ந்த தடமார்வர்‌ தகை சேர்‌ வம்பு மலர்கின்ற பொழில்‌ பைம்பொன்‌ வருதும்பி மணி கங்குல்‌ வயல்‌ சூழ்‌ நம்பன்‌ உறைகின்ற நகர்‌ நந்திபுர விண்ணகரம்‌ நண்ணு மனமே!

1441

பிறையின்‌ ஒளி எயிறிலக முறுகி எதிர்‌ பொருதுமென வந்த அசுரர்‌ இறைகள்‌ அவை நெறு நெறன வெறிய அவர்‌ வயிறழல நின்ற பெருமான்‌ சிறை கொள்‌ மயில்‌ குயில்‌ பயில மலர்கள்‌ உ௧ அளி முரல அடிகொள்‌ நெடூமா நறை செய்‌ பொழில்‌ மழை தவழும்‌ நந்திபுர விண்ணகரம்‌ நண்ணு மனமே!

1442

மூள எரி சிந்தி முனி எய்தி அமர்‌ செய்துமென வந்த அசுரர்‌ தோளும்‌ அவர்‌ தாளும்‌ முடியோடு பொடியாக நொடியாமளவெய்தான்‌ வாளும்‌ வரி வில்லும்‌ வளை ஆழி கதை சங்கம்‌ இவை அங்கை உடையான்‌ நாளும்‌ உறைகின்ற நகர்‌ நந்திபுர விண்ணகரம்‌ நண்ணு மனமே!

1443

தம்பியொடு தாம்‌ ஒருவர்‌ தன்‌ துணைவி காதல்‌ துணையாக மூன நாள்‌ வெம்பி எரி கானகம்‌ உலாவும்‌ அவர்‌ தாம்‌ இனிது மேவு நகர்‌ தான்‌ கொம்பு குதி கொண்டு குயில்‌ கூவ மயில்‌ ஆலும்‌ எழிலார்‌ புறவு சேர்‌ நம்பி உறைகின்ற நகர்‌ நந்திபுர விண்ணகரம்‌ நண்ணு மனமே!

1444

தந்தை மனமுந்து துயர்‌ நந்த இருள்‌ வந்த விறல்‌ நந்தன்‌ மதலை எந்தை இவன்‌ என்று அமரர்‌ கந்த மலர்‌ கொண்டு தொழ நின்ற நகர்‌ தான்‌ ர மந்த முழவோசை மழையாக எழு கார்‌ மயில்கள்‌ ஆடு பொழில்‌ சூழ்‌ நந்தி பணி செய்த நகர்‌ நந்திபுர விண்ணகரம்‌ நண்ணு மனமே! 7 சிற

1445

எண்ணில்‌ நினைவெய்தி இனி இல்லை இறை என்று முனியாளர்‌ திருவார்‌ பண்ணில்‌ மலி கீதமொடு பாடி அவர்‌ ஆடலொடு கூட எழிலார்‌ மண்ணில்‌ இது போல நகர்‌ இல்லை என வானவர்கள்‌ தாம்‌ மலர்கள்‌ தூய்‌ நண்ணி உறைகின்ற நகர்‌ நந்திபுர விண்ணகரம்‌ நண்ணு மனமே!

1446

வங்கமலி பெளவம்‌ அது மாமுகடின்‌ உச்சி புக மிக்க பெருநீர்‌ அங்கம்‌ அழியார்‌ அவனது ஆணை தலை சூடும்‌ அடியார்‌ அறிதியேல்‌ பொங்கு புனல்‌ உந்து மணி கங்குல்‌ இருள்‌ சீறும்‌ ஒளி எங்கும்‌ உளதால்‌ நங்கள்‌ பெருமான்‌ உறையும்‌ நந்திபுர விண்ணகரம்‌ நண்ணு மனமே!

1447

நறை செய்‌ பொழில்‌ மழை தவழும்‌ நந்திபுர விண்ணகரம்‌ நண்ணி உறையும்‌ உறை கொள்‌ புகர்‌ ஆழி சுரி சங்கம்‌ அவை அங்கை உடையானை ஒளி சேர்‌ கறை வளரும்‌ வேல்‌ வல்ல கலியன்‌ ஒலி மாலை இவை ஐந்தும்‌ ஐந்தும்‌ முறையில்‌ இவை பயில வல அடியவர்கள்‌ கொடுவினைகள்‌ முழுதகலுமே

அடிவரவு: தீதறு உய்யும்‌ உம்பர்‌ பிறை மூள தம்பியொடு தந்தை எண்ணில்‌ வங்கம்‌ நறைசெய்‌ வண்டு