கையிலங்கு ஆழி சங்கன்! கருமுகில் திருநிறத்தன் பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும் செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென்திருப்பேர் பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே!
5-9. கையிலங்கு
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
கையில் ஆழியும் சங்கும் ஏந்திய, கருமுகில் நிறத்தவனைப் பாடும் பதிகம். "பொய்யிலன், மெய்யன்" — அவன் பொய்யே அறியாதவன் என்பதை ஆழ்வார் வலியுறுத்துகிறார். அவனது திருவடிகளை அடைந்தால் அடிமைத்தனம் தானே வாய்க்கும் என்பதே இதன் உறுதிமொழி. நம்பகத்தன்மையை முன்வைத்து அழைக்கும் பதிகம் இது.
பெரிய திருமொழி 5-9 - கையிலங்கு (திருப்பேர்நகர்)
வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும் அங்கண்மா ஞாலம் எல்லாம் அழுது செய்து உமிழ்ந்த எந்தை ர திங்கள் மாமுகில் அணவு செறி பொழில் தென்திருப்பேர் எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே!
ஒருவனை உந்திப்பூ மேல் ஓங்குவித்து ஆகம் தன்னால் ஒருவனைச் சாபம் நீக்கி உம்பர் ஆள் என்று விட்டான் !! நும்முடை !!3 சங்கம் பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவணை மேல் கருவரை வண்ணன் தென்பேர்!' கருதி நான் உய்ந்தவாறே!
ஊனமர் தலை ஒன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன் ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறிவயல் தென்திருப்பேர் வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே!
வக்கரன் வாய் முன்கீண்ட மாயனே! என்று வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன் ஆகத்தானை நக்கரி உருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே
விலங்கலால் கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு வில்லால் இலங்கை மாநகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி ஏத்தக் கேட்டு மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்தவாறே!
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சி கண்ணியர் குறுங்கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான் திண்ணமா மதிள்கள் சூழ்ந்த தென்திருப்பேருள் வேலை வண்ணனார் நாம நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே!
அம்பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள் கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் ர் செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப்பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே!
நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறங்கம் வல்லார் மேலை வானவரில் மிக்க வேதியர் ஆதி காலம் சேலுகள் வயல் திருப்பேர்ச் செங்கண் மாலோடும் வாழ்வார் சீலமா தவத்தர் சிந்தையாளி என் சிந்தையானே
வண்டறை பொழில் திருப்பேர் வறி அரவணையில் பள்ளி கொண்டு உறைகின்ற மாலைக் கொடு மதிள் மாட மங்கை திண்திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை கொண்டிவை பாடி ஆடக் கூடுவர் நீள் விசும்பே
அடிவரவு: கை வங்கம் ஒருவனை ஊன் வக்கரன் விலங்கலால் வெண்ணெய் அம்பொன் நால் வண்டறை தீதறு