ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்றொழிந்திலை உகந்து தோழன் நீ எனக்கு இங்கொழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட ஆழி வண்ண! நின் அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!
5-8. ஏழை ஏதலன்''!
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது இரங்கி" — தகுதி பார்க்காமல் அருள் செய்யும் இயல்பைச் சொல்லும் பதிகம். ஏழையென்றோ அயலானென்றோ தாழ்ந்தவனென்றோ ஒதுக்காமல், இன்னருள் சுரந்ததை ஆழ்வார் நினைவுகூர்கிறார். அருள் தகுதியின் விளைவு அல்ல, தேவையின் விளைவே என்பது இங்கே தெளிவாகிறது.
பெரிய திருமொழி 5-8 - ஏழை ஏதலன்''! (திருவரங்கம் 5)
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதி என்றொழிந்திலை உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று கோதில் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண்பொருள் எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!
கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் முடியும் வண்ணம் ஓர் முழுவலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்ப கொடுய வாய் விலங்கின்னுயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஒன்றுண்டூளதறிந்து உன் அடியனேனும் வந்து அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து ர வெஞ்சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடுய செய்வனவுள அதற்கு அடியேன் அஞ்சி வந்து நின் அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!
மாக மாநிலம் முழுவதும் வந்து இறைஞ்சும் மலரடி கண்ட மாமறையாளன் தோகை மாமயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும் ஆக வேண்டும் என்று அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!
மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றம் தன்னை அஞ்சி நின் சரண் எனச் சரணாய்த் தகவில் காலனையுக முனிந்தொழியா பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும் அன்னது ஆகும் என்று அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய் ஆதலால் வந்து உன் அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை! நின் சரண் என்னுடை மனைவி காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர்!!! தெய்வம் கொண்டொலிக்கும் என்றழைப்ப ஏதலார் முன்னே இன்னருள் அவற்குச் செய்து உன் மக்கள் மற்றிவர் என்று கொடுத்தாய் ஆதலால் வந்து உன் அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே! 8 !!! கடிய தெய்வம்
துளங்கு நீண்முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு உளங்கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழுடன் இருப்ப வளங்கொள் மந்திரம் மற்றவற்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!
மாடமாளிகை சூழ் திருமங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல்மா வலவன் கலி கன்றி அணிபொழில் திருவரங்கத்தம்மானை ர நீடு தொல் புகழாழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்! பாட நும்மிடைப்!! பாவம் நில்லாவே
அடிவரவு: ஏழை வாதம் கடி நஞ்சு மாகம் மன்னு ஓது வேதம் துளங்கு மாடம் கை