கைம்மான மழகளிற்றைக் கடல் கிடந்த கருமணியை மைம்மான மரதகத்தை மறை உரைத்த திருமாலை எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனிகாத்த அம்மானை யான் கண்டது அணிநீர்த் தென்னரங்கத்தே
5-6. கைம்மானம்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
கடலில் கிடந்த கருமணி, மரகதம், மறை உரைத்த திருமால் என ஆழ்வார் விலைமதிப்பற்ற பொருள்களால் இறைவனை உருவகிக்கும் பதிகம். கல்லும் மணியும் ஒளியும் — கண்ணுக்குத் தெரியும் அழகின் மொழியாலேயே அவனைச் சொல்ல முயல்கிறார். "எம்மான்" என்று முடிக்கும் உரிமை இங்கும் தொடர்கிறது.
பெரிய திருமொழி 5-6 - கைம்மானம் (திருவரங்கம் 3)
பேரானைக் குறுங்குடி எம்பெருமானை திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண் கடல் ஏழும் மலை ஏழு இவ்வுலகேழு உண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே
ஏனாகி உலகிடந்து அன்று இருநிலனும் பெரு விசும்பும் தானாய பெருமானைத் தன்னடியார் மனத்து என்றும் தேனாகி அழுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே
வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம் தளர்ந்து அதிர!!! உதைத்தவனைத் தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை பெருநிலம் ஈரடி நீட்டிப் பண்டு ஒரு நாள் அளந்தவனை யான் கண்டது அணிநீர்த் தென்னரங்கத்தே
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன் ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே உதிர பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்திரத்தின் ஆரழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே
தன் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் தவநெறியை தரியாது கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசை உருவை அசைவித்த அஞ்சிறைப் புள் பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே
சிந்தனையைத் தவ நெறியைத் திருமாலை ர பிரியாது வந்து எனது! மனத்து இருந்த வடமலையை வரிவண்டார் கொந்தணைந்த பொழில் கோவல் உலகளப்பான் அடு நிமிர்த்த அந்தணனை யான் கண்டது அணிநீர்த் தென்னரங்கத்தே
துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லாச் சமணர்க்கும் அவர்கட்கு அங்கு அருளில்லா அருளானை தன்னடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம்மனைக்கும் அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே
பொய் வண்ணம் மனத்து அகற்றிப் புலன் ஐந்தும் செல வைத்து மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய் நின்ற வித்ததனை மைவண்ணம் கருமுகில் போல் திகழ் வண்ணம் மரதகத்தின் அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே
ஆமருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானை காமரு சீர்க் கலிகன்றி ஒலி செய்த மலிபுகழ் சேர் நாமருவு தமிழ் மாலை நாலிரண்டோடு இரண்டினையும் தாமருவி வல்லார் மேல் சாரா தீவினை தானே!
அடிவரவு: கைம்மானம் பேரானை ஏனாகி வளர்ந்தவனை நீர் தம் சிந்தனை துவரித்த போய் ஆமருவி பண்டை