போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொருதிறல் கஞ்சன் கடியன் காப்பாருமில்லை கடல்வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்
2-3. போய்ப்பாடு
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
காது குத்தும் பருவம். "உன் தந்தை வரத் தாமதிக்கிறார், கஞ்சன் கொடியவன், காப்பார் யாருமில்லை; தனியே எங்கும் திரியாதே" என்று தாய் அஞ்சுகிறாள். காதில் கடிப்பு அணிவிக்க அழைக்கும்போது, குழந்தை "முலை வேண்டேன்" என்று ஓடி, கடிப்பைப் பறித்தெறிகிறது; "காது நோகும், என்னால் பொறுக்க முடியாது" என்று அரற்றுகிறது. மலையைக் குடையாக ஏந்தியவன் காது நோவுக்கு அஞ்சுவது இப்பதிகத்தின் நகைச்சுவை.
பெரியாழ்வார் திருமொழி 2-3 போய்ப்பாடு (பன்னிருநாமம்: காதுகுத்துதல்)
வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப்பாதக் கிங்கிணி ஆர்ப்ப நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் ர எண்ணற்கரிய பிரானே திரியை எரியாமே காதுக்கிடூவன் கண்ணுக்கு னன்றும் அழகுடைய கனகக் கடிப்பும் இவையா
வையம் எல்லாம் பெறும்வார்கடல் வாழும் மகரக்குழை கொண்டு வைத்தேன் வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியதெல்லாம் தருவன் உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுடர் ஆயர் கொழுந்தே மையன்மை செய்து இளவாய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய்
வணநன்றுடைய வயிரக் கமிப்பிட்டு வார்காது தாழப் பெருக்கி குணநன்றுடையர் இக்கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய் இணைநன்றழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து சுணநன்றணி முலையுண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய்
சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரிகுழமலாரொடு நீ போய் கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டுடூவனோ நம்பீ பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிடவொட்டில் வேய்த்தடந்தோளார் விரும்பு கருங்குழல் விட்டூவே நீ இங்கே வாராய்
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பியதனை நான் நோக்கி மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்றறிந்தேன் புண்ணேதுமில்லை உன் காதுமறியும் பொறுத்து இறைப்போது இரு நம்பீ கண்ணா என் கார்முகிலே கடல்வண்ணா காவலனே முலையுணாயே
முலையேதும் வேண்டேன் என்றோடி நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந்திட்டு மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய் ர சிலையொன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திருவாயர்பாடிப் பிரானே தலைநிலாப்போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமேயன்றே
என் குற்றமேயென்று சொல்லவும் வேண்டாகாண் என்னை நான் மண்ணுண்டேனாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே வன்புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் துன்புற்றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டூச் சொல்லுகேன் மெய்யே
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயையென்று கையைப் பிடித்துக் கரையுரலோடு என்னைக் காணவே கட்டிற்றிலையே செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும் கையில் திரியையிடுகிடாய் இன்னின்ற காரிகையார் சிரியாமே
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்குற்றென் காதுகள் வீங்கியெரியில் தாரியாதாகில் தலை நொந்திடூமென்று விட்டிட்டேன் குற்றமேயன்றே சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி ஏர்விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடிகமழ் பூங்குழலார்கள் எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே ர உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக்கிடூவன் பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட பற்பனாபா இங்கே வாராய்
வாவென்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கிங்கிழுக்குற்றென் காதுகள் நொந்திடூும்கில்லேன் நாவற்பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச் சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்
வார்காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழையிட வேண்டி சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ பாரார்தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே