Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

1-1. வண்ண மாடங்கள்

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

கண்ணன் பிறந்த மகிழ்ச்சியை ஆயர்பாடி முழுவதும் கொண்டாடும் காட்சி. மக்கள் ஒருவர் மேல் ஒருவர் எண்ணெயும் மஞ்சளும் தூவி, பாடி ஆடி, முற்றமே சேறாகும் வரை களிக்கிறார்கள். தேவர்களும் ஆயர் வடிவில் வந்து கலந்து கொள்கிறார்கள். யசோதை குழந்தையின் வாயைத் திறந்தபோது அதனுள் ஏழுலகங்களையும் கண்டு, இவன் சாதாரண குழந்தை அல்லன் என்பதை ஊரார் உணரத் தொடங்குகிறார்கள்.

பெரியாழ்வார்‌ திருமொழி 1-1 வண்ண மாடங்கள்‌ (கண்ணன்‌ திருவவதூரச்‌ சிறப்பு)

13

வண்ண மாடங்கள்‌ சூழ்‌ திருக்கோட்டியூர்‌ கண்ணன்‌ கேசவன்‌ நம்பி பிறந்தினில்‌ எண்ணெய்‌ சுண்ணம்‌ எதிரெதிர்‌ தூவிடக்‌ கண்ணன்‌ முற்றம்‌ கலந்தளராயிற்றே

14

ஓடுவார்‌ விழுவார்‌ உகந்தாலிப்பார்‌ நாடூவார்‌ நம்பிரான்‌ எங்குத்தான்‌ என்பார்‌ பாடூவார்களும்‌ பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும்‌ ஆயிற்று ஆய்ப்பாடியே

15

பேணிச்‌ சீருடைப்‌ பிள்ளை பிறந்தினில்‌ காணத்தாம்‌ புகுவார்‌ புக்குப்‌ போதுவார்‌ ஆணொப்பார்‌ இவன்‌ நேரில்லை காண்‌ திரு வோணத்தான்‌ உலகாளும்‌ என்பார்களே

16

உறியை முற்றத்து உருட்டி நின்றாடூவார்‌ நறுநெய்‌ பால்தயிர்‌ நன்றாகத்‌ தூவுவார்‌ செறிமென்‌ கூந்தல்‌ அவிழத்‌ திளைத்து எங்கும்‌ அறிவழிந்தனர்‌ ஆய்ப்பாடி ஆயரே

17

கொண்டதாளுறி கோலக்‌ கொடுமழு தண்டினர்‌ பறியோலைச்‌ சயனத்தர்‌ விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர்‌ அண்டர்‌ மிண்டிப்‌ புகுந்து நெய்யாடினார்‌

18

கையும்‌ காலும்‌ நிமிர்த்துக்‌ கடார நீர்‌ பையவாட்டிப்‌ பசுஞ்சிறு மஞ்சளால்‌ ஐய நாவழித்தாளுக்கு அங்காந்திட வையமேழும்‌ கண்டாள்‌ பிள்ளை வாயுளே

19

வாயுள்‌ வையகம்‌ கண்ட மடநல்லார்‌ ஆயர்‌ புத்திரன்‌ அல்லன்‌ அருந்தெய்வம்‌ பாயசீருடைப்‌ பண்புடைப்‌ பாலகன்‌ மாயன்‌ என்று மகிழ்ந்தனர்‌ மாதரே

20

பத்து நாளும்‌ கடந்த இரண்டா நாள்‌ எத்திசையும்‌ சயமரம்‌ கோடித்து மத்த மாமலை தாங்கிய மைந்தனை உத்தானம்‌ செய்து உகந்தனர்‌ ஆயரே

21

கிடக்கில்‌ தொட்டில்‌ கிழிய உதைத்திடூும்‌ எடுத்துக்‌ கொள்ளில்‌ மருங்கை இறுத்திடூும்‌ ஒ௫டக்கிப்‌ புல்கில்‌ உதரத்தே பாய்ந்திடும்‌ மிடுக்கிலாமையால்‌ நான்‌ மெலிந்தேன்‌ நங்காய்‌

22

சந்நெலார்‌ வயல்‌ சூழ்‌ திருக்கோட்டியூர்‌ மன்னு நாரணன்‌ நம்பி பிறந்தமை மின்னு நூல்‌ விட்டுசித்தன்‌ விரித்த இப்‌ பன்னு பாடல்‌ வல்லார்க்கு இல்லை பாவமே