அறிவதரியான் அனைத்துலகும் உடையான் என்னை ஆளுடையான் குறிய மாணி உருவாய!!! கூத்தன் மன்னி அமருமிடம் நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே
5-1. அறிவதரியான்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"அறிவதரியான், அனைத்துலகும் உடையான், என்னை ஆளுடையான்" — மூன்று சொற்களில் இறைவனை வரையறுக்கும் தொடக்கம். அறிய முடியாதவன், எல்லாவற்றையும் உடையவன், ஆனால் என்னையும் ஆள்பவன் என்று படிப்படியாக அருகில் வருகிறார். குறியமாணியாய் வந்த கூத்தனை நினைவுகூர்ந்து அத்தலத்தில் நிறுத்துகிறார்.
பெரிய திருமொழி 5-1 - அறிவதரியான் (திருப்புள்ளம்பூதங்குடி)
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் பள்ளச் செறுவில் கயல் உகளப் பழனக் கழனி அதனுள் போய் புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே
மேவா அரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம் காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும் பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே
வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாளரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐந்நான்கும் துணித்த வல்வில் இராமனிடம் கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள் பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே
மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் நெய்யார் பாலோடு அழுது செய்த நேமி அங்கை மாயனிடம் செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்றணையும் பொய்யா நாவின் மறையாளர் புள்ளம் பூதங்குடி தானே
மின்னின் அன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்கா மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்றடர்த்த மாலதிடம் ர மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரிவண்டு இசை பாட புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுது ஆநிரை காத்து சடையான் ஓட அடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம் குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே
கறையார் நெடூவேல் மறமன்னர் வீய விசயன் தேர் கடவி இஇறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தையிடம் மறையால் முத்தி அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் பொறையால் மிக்க அந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலனிடம் மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும் பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே
கற்றா மறித்து காளியன் தன் சென்னி நடூங்க நடம் பயின்ற பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல் கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயற்கைக் கலிகன்றி சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோர நில்லா துயர் தாமே!!!
அடிவரவு: அறிவது கள்ளம் மேவா வெற்பால் மையார் மின்னின் குடை கறை துன்னி கற்றா தாம்