ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான் பேய்ச்சியை முலை உண்டு இணைமருது இறுத்துப் பெருநிலம் அளந்தவன் கோயில் காய்த்த நீள் கழுகும் கதலியும் தெங்கும் எங்கும் மாம் பொழில்களின் நடுவே வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளியங்குடி அதுவே
4-10. ஆய்ச்சியர்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
ஆய்ச்சியர் அழைக்க வெண்ணெய் உண்டவனும், ஆலிலையில் வளர்ந்தவனும், பேய்ச்சியின் முலையுண்டவனும் ஒருவனே என்று இணைத்துச் சொல்லும் பதிகம். வீட்டு விளையாட்டும், ஊழிக்கால அமைதியும், உயிர்கொல்லும் ஆபத்தும் ஒரே குழந்தையின் கதையில் இடம்பெறுகின்றன. நான்காம் பத்து இந்த ஒருங்கிணைப்புடன் நிறைவடைகிறது.
பெரிய திருமொழி 4-10 - ஆய்ச்சியர் (இிருவெள்ளியங்குபு)
ஆறிரை மேய்த்து அன்று அலைகடல் அடைத்திட்டூு அரக்கர் தம் சிரங்களை உருட்டி கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் பூநிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரிவண்டு மிண்டி தேன் இரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே
கடு விடம் உடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்து அவன் தன் படமிறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில் படவர வல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் திருவெள்ளியங்குடி அதுவே
கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காளமேகத் திரு உருவன் பறவை முன்னுயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில் ர துறை துறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால் செறிமணி மாடக் கொடி கதிர் அணவும் திருவெள்ளியங்குடி அதுவே
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒருகால் தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால் சென்று உறை கோயில் ஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி எமக்கிடம் அன்று இதென்று எண்ணி சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே
காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை உறக் கடல் அரக்கர் தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடூங்கணை துரந்த கோலவில்லி இராமன் தன் கோயில் ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி அதுவே
ஓள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் அள்ளியம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்றவை அழைப்ப வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே
முடி உடை அமரர்க்கு இடர் செயும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய் மடி இடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில் ர படி இடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன் மணிகளின் ஒளியால் விடி பகல் இரவென்று அறிவரிதாய திருவெள்ளியங்குடி அதுவே
குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்றேத்த அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் ர் கடி உடைக் கமலம் அடி இடை மலரக் கரும்பொடு பெருஞ்செந்நெல் அலைய வடிவுடை அன்னம் பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி அதுவே
பண்டு முன் ஏனமாகி அன்றொருகால் கரந்தென பார் இடந்து எயிற்றினில் கொண்டு தெண்திரை வருடப் பாற்கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை வண்டறை சோலை மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக்குரை கடல் உலகே
அடிவரவு: ஆய்ச்சி ஆநிரை கடு கறவை பாரினை காற்று ஒள்ளிய முடி குடி பண்டு அறிவது