Skip to the text
பெரிய திருமொழி

4-9. நும்மைத் தொழுதோம்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"நும்மைத் தொழுதோம், நும் பணி செய்திருக்கும் நும் அடியோம்" — தொண்டு செய்வதன் பயனை இம்மையிலேயே பெற்றுவிட்டதாக ஆழ்வார் அறிவிக்கும் பதிகம். பின்வரும் ஒன்றுக்காகக் காத்திருக்காமல், சேவையே ஊதியம் என்று சொல்லும் தெளிவு இதில் உண்டு. அடிமை என்ற சொல் இங்கே இழிவல்ல, பெருமிதமே.

பெரிய திருமொழி 4-9 - நும்மைத்‌ தொழுதோம்‌ (திருவிந்தளூர்‌)

1328

நும்மைத்‌ தொழுதோம்‌ நுந்தம்‌ பணி செய்திருக்கும்‌ நும்மடியோம்‌ இஇம்மைக்கு இன்பம்‌ பெற்றோம்‌ எந்தாய்‌! இந்தளூரீரே! எம்மைக்‌ கடிதாக்‌ கருமம்‌ அருளி ஆவா! என்றிரங்கி நம்மை ஒருகால்‌ காட்டி நடந்தால்‌ நாங்கள்‌ உய்யோமே?

1329

சிந்தை தன்னுள்‌ நீங்காதிருந்த திருவே! மருவினிய மைந்தா! அந்தணாலி மாலே! சோலை மழகளிறே! நந்தா விளக்கின்‌ சுடரே! நறையூர்‌ நின்ற நம்பீ! என்‌ எந்தாய்‌! இந்தளூராய்‌! அடியேற்கு இறையும்‌ இரங்காயே!

1330

பேசுகின்றது இதுவே வையம்‌ ஈரடியால்‌ அளந்த மூசி வண்டு முரலும்‌ கண்ணி முடியீர்‌! உம்மைக்‌ காணும்‌ ஆசை என்னும்‌ கடலில்‌ வீழ்ந்து இங்கு அயர்த்தோம்‌ அயலாரும்‌ ஏசுகின்றது இதுவே காணும்‌ இந்தளூரீரே!

1331

ஆசை வழுவாதேத்தும்‌ எமக்கிங்கு இழுக்காய்த்து அடியோர்க்குத்‌ தேசமறிய உமக்கே ஆளாய்த்‌ திரிகின்றோழுக்கு காசினொளியில்‌ திகழும்‌ வண்ணம்‌ காட்டீர்‌ எம்பெருமான்‌! வாசி வல்லீர்‌! இந்தளூரீர்‌! வாழ்ந்தே போம்‌ நீரே

1332

தீ எம்பெருமான்‌ நீர்‌ எம்பெருமான்‌ திசையும்‌ இரு நிலனு மாய்‌ எம்பெருமானாகி நின்றால்‌ அடியோம்‌ காணோமால்‌ ர்‌ தாய்‌ எம்பெருமான்‌ தந்தை தந்தை ஆவீர்‌ அடியோமுக்‌ கே எம்பெருமான்‌ அல்லீரோ? நீர்‌ இந்தளூரீரே!

1333

சொல்லாது ஒழியகில்லேன்‌ அறிந்த சொல்லில்‌ நும்‌ அடியார்‌ எல்லாரோடும்‌ ஒக்க எண்ணி இருந்தீர்‌ அடியேனை நல்லார்‌ அறிவீர்‌ தீயார்‌ அறிவீர்‌ நமக்கு இவ்வுலகத்து எல்லாம்‌ அறிவீர்‌ ஈதே அறியீர்‌ இந்தளூரீரே!

1334

மாட்டீரானீர்‌ பணி நீர்‌ கொள்ள எம்மைப்‌ பணி அறியா வீட்டீர்‌ இதனை வேறே சொன்னோம்‌ இந்தளூரீரே! காட்டீரானீர்‌ நுந்தம்‌ அடிக்கள்‌ காட்டில்‌ உமக்கு இந்த நாட்டே வந்து தொண்டரான நாங்கள்‌ உய்யோமே?

1335

முன்னை வண்ணம்‌ பாலின்‌ வண்ணம்‌ முழுதும்‌ நிலை நின்ற பின்னை வண்ணம்‌ கொண்டல்‌ வண்ணம்‌ வண்ணம்‌ எண்ணுங்கால்‌ பொன்னின்‌ வண்ணம்‌ மணியின்‌ வண்ணம்‌ புரையும்‌ திருமேனி இன்ன வண்ணம்‌ என்று காட்டீர்‌ இந்தளூரீரே!

1336

எந்தை தந்தை தம்மான்‌ என்றென்று எமர்‌ ஏழேழ்‌ அளவும்‌ வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்‌ சிந்தை தன்னுள்‌ முந்தி நிற்றிர்‌ சிறிதும்‌ திருமேனி இந்த வண்ணம்‌ என்று காட்டீர்‌ இந்தளூரீரே

1337

ஏரார்‌ பொழில்‌ சூழ்‌ இந்தளூரில்‌ எந்தை பெருமானை காரார்‌ புறவின்‌ மங்கை வேந்தன்‌ கலியனொலி செய்த சீரார்‌ இன்‌ சொல்‌ மாலை கற்றுத்‌ திரிவார்‌ உலகத்தில்‌ ஆரார்‌ அவரே அமரர்க்கு என்றும்‌ அமரர்‌ ஆவாரே

அடிவரவு: நும்மை சிந்தை பேசுகின்றது ஆசை தீ சொல்லாது மாட்டீர்‌ முன்னை எந்தை ஏரார்‌ ஆய்ச்சியர்‌