கவள யானைக் கொம்பொசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க் குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என்னானை என்றும் தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும் பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே
4-8. கவள யானை
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
கவளம் உண்ணும் யானையின் கொம்பை ஒசித்த கண்ணனையும், குவளை மலர் போன்ற, மேகம் போன்ற மேனி கொண்ட கோனையும் பாடும் பதிகம். வலிமையின் காட்சிக்கும் அழகின் காட்சிக்கும் இடையே ஆழ்வார் இடைவெளியே விடுவதில்லை. அவனைப் பார்ப்பதென்பது இரண்டையும் ஒரே சமயத்தில் பார்ப்பதுதான்.
பெரிய திருமொழி 4-8 - கவள யானை (திருநாங்கூர் திருப்பதி 11 : 11. திருப்பார்த்தன்பள்ளி)
கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளை என்றும் வஞ்சமேவி வந்த பேயின் உயிரை உண்ட மாயன் என்றும் செஞ்சொலாளர் நீடு நாங்கைத் தேவதேவன் என்றென்று ஓதி பஞ்சி அன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே
அண்டர் கோன் என்னானை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் என்றும் நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும் வண்டூலவு பொழில் கொள் நாங்கை மன்னும் ஆயன் என்றென்று ஓதி பண்டு போலன்று என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே மல்லை முன்னீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் என்றும் செல்வம் மல்கு மறையோர் நாங்கை தேவதேவன் என்றென்று ஓதி பல்வளையாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடூவாளே
அரக்கர் ஆவி மாள அன்று ஆழ்கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் என்றும் கோலவில்லி என்றும் மாமதியை நெருக்கு மாட நீடு நாங்கை நின்மலன் என்றென்று ஓதி பரக்கழிந்தாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே
ஞாலமுற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ் வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து சேலுகளும் வயல் கொள் நாங்கைத் தேவதேவன் என்றென்று ஓதி பாலின் நல்ல மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே
நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு சேடூலவு பொழில் கொள் நாங்கைத் தேவதேவன் என்றென்று ஓதி பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடூவாளே
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா நிலவும் ஆழிப் படையன் என்றும் நேசன் என்றும் தென்திசைக்குத் திலதம் அன்ன மறையோர் நாங்கைத் தேவதேவன் என்றென்று ஓதி பலரும் ஏச என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழுலகுக்கு ஆதி என்றும் திண்ண மாட நீடு நாங்கைத் தேவதேவன் என்றென்று ஓதி பண்ணின் அன்ன மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே
பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன்பள்ளிச் செங்கண் மாலை வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலை தாய் மொழிந்த மாற்றம் கூர்கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார் ஏர்கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே
அடிவரவு: கவளம் கஞ்சன் அண்டர் கொல்லை அரக்கர் ஞாலம் நாடி உலகம் கண்ணன் பாருள் நும்மை