கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்! நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர் திண்ணார் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள் அண்ணா! அடியேன் இடரைக் களையாயே
4-7. கண்ணார் கடல்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்" — கடல் போன்ற கரிய திருமேனியை விளித்துத் தொடங்கும் பதிகம். நாங்கூர் என்னும் தலத்தின் சிறப்பையும், அங்கு வாழும் வீரர்களின் பெருமையையும் ஆழ்வார் சேர்த்துச் சொல்கிறார். தலமும் அதைச் சார்ந்தவரும் இணைந்தே இறைவனுக்குச் சூழலாகின்றனர்.
பெரிய திருமொழி 4-7 - கண்ணார் கடல் (திருநாங்கூர் திருப்பதி 11 : 10. திருவெள்ளக்குளம்)
கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே! நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர் செந்தாமரை நீர்த் திருவெள்ளக்குளத்துள் எந்தாய்! அடியேன் இடரைக் களையாயே
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே! நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர் சென்றார் வணங்கும் திருவெள்ளக்குளத்துள் நின்றாய்! நெடியாய்! அடியேன் இடர் நீக்கே
கானார் கரி கொம்பது ஒசித்த களிறே! நானா வகை நல்லவர் மன்னிய நாங்கூர் தேனார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் ஆனாய்! அடியேனுக்கு அருள் புரியாயே
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே! நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் சேடார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய்! பாடா வருவேன் வினை ஆயின பாற்றே
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய்! நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வா! திருவெள்ளக்குளத்து உறைவானே! எல்லா இடரும் கெடுமாறு அருளாயே
கோலால் நிரை மேய்த்த எங்கோவலர் கோவே! நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர் சேலார் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள் மாலே! என வல்வினை தீர்த்து அருளாயே
வாராகம் அதாகி இம்மண்ணை இடந்தாய்! நாராயணணே! நல்ல வேதியர் நாங்கூர் சீரார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் ஆராவமழுதே! அடியேற்கு அருளாயே
பூவார் திருமாமகள் புல்கிய மார்பா! நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த் தேவா! திருவெள்ளக்குளத்து உறைவானே! ஆவா! அடியான் இவன் என்று அருளாயே
நல் அன்புடை வேதியர் மன்னிய நாங்கூர் செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை வல்லர் என வல்லவர் வானவர் தாமே
அடிவரவு: கண்ணார் கொந்து குன்றால் கான் வேடு கல்லால் கோலால் வராகமது பூவார் நல்லன்பு கவளயானை