Skip to the text
பெரிய திருமொழி

4-1. போதலர்ந்த

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

மலர்ந்த பொழில்களும், மணிமுத்தாறு போன்ற ஆற்றின் அலைகளும் சூழ்ந்த தலத்தைப் பாடும் பதிகம். ஊரின் இயற்கை வளத்தை விரிவாக வருணித்த பின்பே அங்கு எழுந்தருளியிருப்பவனை ஆழ்வார் சுட்டுகிறார். இடத்தின் அழகே இறைவனை நோக்கி நம்மை நகர்த்தும் வழி என்பது இம்முறையின் உட்பொருள்.

பெரிய திருமொழி 4-1 - போதலர்ந்த (திருநாங்கூர்‌ திருப்பதி 11 : 4. திருத்தேவனார்‌ தொகை)

1248

போதலர்ந்த பொழிற்‌ சோலைப்‌ புறம்‌ எங்கும்‌ பொரு திரைகள்‌ தாதுதிர வந்தலைக்கும்‌ தடமண்ணித்‌ தென்‌ கரை மேல்‌ மாதவன்‌ தான்‌ உறையும்‌ இடம்‌ வயல்‌ நாங்கை வரிவண்டு தேதென என்று இசை பாடும்‌ திருத்தேவனார்‌ தொகையே

1249

யாவருமாய்‌ யாவையுமாய்‌ எழில்‌ வேதப்‌ பொருள்களுமாய்‌ மூவருமாய்‌ முதலாய மூர்த்தி அமர்ந்து உறையும்‌ இடம்‌ மாவரும்‌ திண்படை மன்னை வென்றி கொள்வார்‌ மன்னு நாங்கை தேவரும்‌ சென்று இறைஞ்சு பொழில்‌ திருத்தேவனார்‌ தொகையே 3?

1250

வானாடும்‌ மண்ணாடும்‌ மற்றுள்ள பல்லுயிரும்‌ தானாய எம்பெருமான்‌ தலைவன்‌ அமர்ந்து உறையும்‌ இடம்‌ ஆனாத பெருஞ்செல்வத்து அருமறையோர்‌ நாங்கை தன்னுள்‌ தேனாரும்‌ மலர்ப்‌ பொழில்‌ சூழ்‌ திருத்தேவனார்‌ தொகையே

1251

இந்திரனும்‌ இமையவரும்‌ முனிவர்களும்‌ எழில்‌ அமைந்த சந்த மலர்ச்‌ சதுமுகனும்‌ கதிரவனும்‌ சந்திரனும்‌ எந்தை எமக்கு அருள்‌ என நின்று அருளும்‌ இடம்‌ எழில்‌ நாங்கை சுந்தர நற்பொழில்‌ புடை சூழ்‌ திருத்தேவனார்‌ தொகையே

1252

அண்டமும்‌ இவ்வலைகடலும்‌ அவனிகளும்‌ குலவரையும்‌ உண்ட பிரான்‌ உறையும்‌ இடம்‌ ஒளிமணி சந்தகில்‌ கனகம்‌ தெண்திரைகள்‌ வரத்‌ திரட்டூம்‌ திகழ்‌ மண்ணித்‌ தென்கரை மேல்‌ திண்‌ திறலார்‌ பயில்‌ நாங்கைத்‌ திருத்தேவனார்‌ தொகையே

1253

ஞாலம்‌ எல்லாம்‌ அழுது செய்து நான்மறையும்‌ தொடராத பாலகனாய்‌ ஆலிலையில்‌ பள்ளி கொள்ளும்‌ பரமன்‌ இடம்‌ சாலி வளம்‌ பெருகி வரும்‌ தடமண்ணித்‌ தென்கரை மேல்‌ சேல்‌ உகளும்‌ வயல்‌ நாங்கைத்‌ திருத்தேவனார்‌ தொகையே

1254

ஓடாத வாளரியின்‌ உருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால்‌ பிளந்தளைந்த மாலதிடம்‌ ஏடேறு பெருஞ்செல்வத்து எழில்‌ மறையோர்‌ நாங்கை தன்னுள்‌ சேடேறு பொழில்‌ தழுவு! திருத்தேவனார்‌ தொகையே

1255

வாராரும்‌ இளங்கொங்கை மைதிலியை மணம்‌ புணர்வான்‌ காரார்‌ திண்சிலை இறுத்த தனிக்‌ காளை கருதுமிடம்‌ ஏராரும்‌ பெருஞ்செல்வத்து எழில்‌ மறையோர்‌ நாங்கை தன்னுள்‌ சீராரும்‌ மலர்ப்‌ பொழில்‌ சூழ்‌ திருத்தேவனார்‌ தொகையே

1256

கும்பமிகு மத யானை பாகனொடும்‌ குலைந்து வீழ கொம்பு அதனைப்‌ பறித்து எறிந்த கூத்தன்‌ அமர்ந்து உறையும்‌ இடம்‌ வம்பவிழும்‌ செண்பகத்தின்‌ மணங்கமழும்‌ நாங்கை தன்னுள்‌ செம்பொன்‌ மதிள்‌ பொழில்‌ புடை சூழ்‌ திருத்தேவனார்‌ தொகையே

1257

காரார்ந்த திருமேனிக்‌ கண்ணன்‌ அமர்ந்து உறையும்‌ இடம்‌ சீரார்ந்த பொழில்‌ நாங்கைத்‌ திருத்தேவனார்‌ தொகை மேல்‌ கூரார்ந்த வேற்கலியன்‌ கூறு தமிழ்‌ பத்தும்‌ வல்லார்‌ ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே

அடிவரவு: போது யாவரும்‌ வானாடும்‌ இந்திரனும்‌ அண்டமும்‌ ஞாலம்‌ ஓடாத வாராரும்‌ கும்பம்‌ காரார்ந்த கம்பமா 82. அமர்ந்த *! சேடேறு மலர்ப்‌ பொழில்‌ சூழ்‌