ர நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்! நர நாரணனே! கருமாமுகில் போல் எந்தாய்! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும் கந்தாரம் அந்தேன் இசை பாட மாடே களிவண்டு மிழற்ற நிழல் துதைந்து மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே!
3-8. நந்தா விளக்கே
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"நந்தா விளக்கே, அளத்தற்கு அரியாய், நரநாரணனே" — அணையா விளக்குக்கு இறைவனை ஒப்பிட்டு ஆழ்வார் விளிக்கும் பதிகம். ஒவ்வொரு பாசுரமும் "எமக்கே அருளாய்" என்ற ஒரே வேண்டுதலில் முடிகிறது. விளக்கத்தை அல்ல, அருளையே கேட்கும் நேரடித்தன்மை இதன் வலிமை.
பெரிய திருமொழி 3-8 - நந்தா விளக்கே (திருநாங்கூர் திருப்பதி 11 : 1. திருமணிமாடக் கோயில்)
முதலைத் தனிமா முரண் தீர அன்று முதுநீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம் விண் அணவும் பதலைக்க போதத்தொளி மாட நெற்றிப் பவளக் கொழுங்கால பைங்கால் புறவம் மதலைத் தலை மென் பெடை கூடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே!
கொலைப்புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று கொடூமா முதலைக்கு இடர் செய்து கொங்கார் இலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மானிடம் ஆளரியால் அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணிழுத்தும் வெண்சாமரையோடு பொன்னி மலைப்பண்டம் அண்டத் திரையுந்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே!
சிறையார் உவணப் புள்ளொன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் கறையார் நெடுவேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான் முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர் ஐவேள்வி ஆறங்கர் ஏழின் இசையோர் மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே!
இழையாடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து தழை வாட வந்தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான் குழையாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு மழையாடு சோலை மயிலாலு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே!
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக்கு இரங்காது அவள் தன் உண்ணா முலை மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் ஓங்கு பைந்தாள் கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து மண்ணேந்து இளமேதிகள் வைகு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே!
தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம் இஇளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் ர மாமதியம் திளைக்கும் கொடு மாளிகை சூழ் தெருவில் செழுழுத்து வெண்ணெற்கெனச் சென்று மூன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே!
துளையார் கருமென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண் முளைவாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டு இருந்து முதிராத இன்சொல் வளைவாய கிள்ளை மறை பாடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே!
விடையோட வென்று ஆய்ச்சி மெந்தோள் நயந்த விகிர்தா! விளங்கு சுடர் ஆழி என்னும் படையோடு சங்கொன்று உடையாய்! என நின்று இமையோர் பரவும் இடம் பைந்தடத்துப் பெடையோடு செங்கால அன்னம் துகைப்பத் தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர் மடையோட நின்று மது விம்மு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே!
வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும் தொண்டாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் கண்டார் வணங்கக் களியானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் விண் தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே
அடிவரவு: நந்தா முதலை கொலை சிறை இழை பண் தளை துளை விடை வண்டார் சலம்