மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி பொய்ச் சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
2-1. மெச்சூது
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"அப்பூச்சி காட்டுகின்றான்" — கண்ணன் கைகளால் முகத்தை மறைத்துத் திறந்து விளையாடும் பருவம். ஒவ்வொரு பாசுரமும் முதலில் அவனது பெருஞ்செயலை நினைவுகூர்கிறது — பாரதப் போரில் பார்த்தனுக்குத் தேர் ஓட்டியது, தேவகிக்கு மகனாய்த் தோன்றியது, முதலை வாய்ப்பட்ட யானையைக் காத்தது — பின்பு "அவனே வந்து அப்பூச்சி காட்டுகிறான்" என்று முடிகிறது. உலகைக் காப்பவன் ஒரு குழந்தையாய் விளையாடுவதில் உள்ள வியப்பே இப்பதிகம்.
பெரியாழ்வார் திருமொழி 2-1 மெச்சூது பூச்சிகாட்டி விளையாடுதல்)
மலைபுரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளையத் திண்தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
காயும்நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து வன்கஞ்சன் மாளப் புரட்டி அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (க)
சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்க துடிக்க அன்று ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ சித்த மனையாள் அசோதை இளஞ்சிங்கம் ர் கொத்தார் கருங்குழல் கோபால கோளரி அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
கொங்கை வன் கூனி சொற்கொண்டு குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கருளி வன் கானடை அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
பதக முதலை வாய்ப் பட்ட களிறு கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன உதவப் புள்ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
வல்லாள் இலங்கை மலங்கச் சரந்துரந்த வில்லாளனை விட்டுசித்தன் விரித்த சொல்லார்ந்த அப்பூச்சிப் பாடல் இவை பத்தும் வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே