கள்வன் கொல்? யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதவென்று வெள்ளி வளைக் கைப் பற்றப் பெற்ற தாயரை இட்டகன்று! அள்ளலம் பூங்கழனி அணியாலி புகுவர் கொலோ?
3-7. கள்வன் கொல்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"கள்வன் கொல்? யான் அறியேன்" — கரிய நிறமுடைய ஒரு காளை வந்து தன் மகளைக் கவர்ந்து சென்றதாகத் தாய் அரற்றும் பதிகம். திருடனா, தெய்வமா என்று அறியாத நிலையில் அவள் தவிக்கிறாள். காதலின் தொடக்கத்தில் உள்ள குழப்பத்தையும் ஈர்ப்பையும் இப்பதிகம் ஒருசேரப் பிடித்துக் காட்டுகிறது.
பெரிய திருமொழி 3-7 - கள்வன் கொல் (திருவாலி 3)
பண்டு இவன் ஆயன் நங்காய்! படிறன் புகுந்து என் மகள் தன் தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து ர் அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ?
அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய்! அரக்கர் குலப் பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே பஞ்சிய மெல்லடி எம் பணைத் தோளி பரக்கழிந்து வஞ்சியன் தண்பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ?
ஏது அவன் தொல் பிறப்பு? இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாய் அவனூர் சொலுவீர்கள்! சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாலி புகுவர் கொலோ?
தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கு அமைந்த மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள்! வேயன தோள் விசிறிப் பெடை அன்னமென நடந்து போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ?
என்துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் தன்துணையாய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் வன்துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் ! அகன்றவன் பின் இஇன்துணைவன்னொடும் போய் எழிலாலி புகுவர் கொலோ?
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் பின்னை தன் காதலன் தன் பெருந்தோள் நலம் பேணினளால் மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ?
முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற சிற்றில்மென் பூவையும் விட்டகன்ற செழுங்கோதை தன்னைப் பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ?
காவியங்கண்ணி எண்ணில் கடிமாமலர்ப் பாவை ஒப்பாள் பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து தூவிசேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் வாவியந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ?
தாய் மனம் நின்றிரங்கத் தனியே நெடுமால் துணையா போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று காய்சின வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை பத்தும் மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே
அடிவரவு: கள்வன் பண்டு அஞ்சுவன் ஏதவன் தாய் என்துணை அன்னையும் முற்றிலும் காவி தாய்மனம் நந்தா