தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மது நுகரும் பொறிவரிய சிறு வண்டே! ர தீவிரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி ஏவரி வெஞ்சிலையானுக்கு என் நிலைமை உரையாயே 1 7? இது கோவில் திருமொழி
3-6. தூவிரிய
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
துணையோடும் பிரியாமல் பூக்களில் தேன் நுகரும் சிறு வண்டை விளித்துப் பேசும் பதிகம். தன் நிலையைச் சொல்லித் தூது அனுப்பும் மரபில் அமைந்தது. பிரிந்திருப்பவரின் கண்ணுக்கு உலகின் ஒவ்வொரு சிறு உயிரும் சேர்ந்திருப்பதாகவே தெரிகிறது — அதுவே வலிக்கிறது.
பெரிய திருமொழி 3-6 - தூவிரிய (திருவாலி 2 - தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கிக் கூறிய பாசுரம்)
பிணி அவிழும் நறுநீல மலர் கிழியப் பெடையோடும் அணிமலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே! மணிகெழுநீர் மருங்கலரும் வயலாலி மணவாளன் பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன் தாராய நறுந்துளவம் பெருந்தகையேற்கு அருளானே! ர் சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் கூர்வாய சிறு குருகே! குறிப்பறிந்து கூறாயே
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர் மீனாய கொடு நெடுவேள் வலி செய்ய மெலிவேனோ? தேன்வாய வரி வண்டே! திருவாலி நகராளும் ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே
வாளாய கண் பனிப்ப மென்முலைகள் பொன் அரும்ப நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ! மண் அளந்த தாளாளா! தண் குடந்தை நகராளா! வரை எடுத்த தோளாளா! என் தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே!
தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன் போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என் அம்மான் தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும் காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ!
கொண்டரவத் திரை உலவு குரை கடல் மேல் குலவரை போல் பண்டரவின் அணைக் கிடந்து பார் அளந்த பண்பாளா! வண்டமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா! என் கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கனவளையும் கடவேனோ!
குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ! துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ! முயலாலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடூவே வயலாலி மணவாளா! கொள்வாயோ மணிநிறமே!
நிலையாளா! நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே? சிலையாளா! மரம் எய்த திறலாளா! திருமெய்ய மலையாளா! நீயாள வளையாள மாட்டோமே
மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி நெய்யிலங்கு சுடர் ஆழிப் படையானை நெடுமாலை ர் கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே
அடிவரவு: தூவிரிய பிணி நீர் தான் வாள் தாராய கொண்டு குயில் நிலையாளா மையிலங்கு கள்வன்