Skip to the text
பெரிய திருமொழி

3-5. வந்துனது

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்" — இறைவனே வலிய வந்து தன் மனத்துள் நுழைந்ததை ஆழ்வார் சொல்கிறார். புகுந்த பின்னரே வணங்கத் தோன்றியது என்பதைக் குறிப்பிடுவது முக்கியம் — முயற்சி முதலில் அவனுடையது. "என் சிந்தனைக்கு இனியாய்" என்ற அழைப்பில் நெருக்கமும் நன்றியும் கலந்திருக்கின்றன.

பெரிய திருமொழி 3-5 - வந்துனது (திருவாலி 1)

1188

வந்துனது அடியேன்‌ மனம்‌ புகுந்தாய்‌ புகுந்ததற்‌ பின்‌ வணங்கும்‌ என்‌ சிந்தனைக்கு இனியாய்‌! திருவே! என்‌ ஆருயிரே! அந்தளிரணியர்‌ அசோகின்‌ இளந்தளிர்கள்‌ கலந்து அவை எங்கும்‌ செந்தழல்‌ புரையும்‌ திருவாலி அம்மானே!

1189

நீலத்‌ தட வரை மாமணி நிகழக்‌ கிடந்தது போல்‌ அரவணை வேலைத்‌ தலைக்‌ கிடந்தாய்‌! அடியேன்‌ மனத்து இருந்தாய்‌! ர்‌ சோலைத்‌ தலைக்‌ கண மாமயில்‌ நடமாட மழை முகில்‌ போன்று எழுந்து - எங்கும்‌ ஆலைப்‌ புகை கமழும்‌ அணியாலி அம்மானே!

1190

நென்னல்‌ போய்‌ வரும்‌ என்றென்று எண்ணி இராமை என்‌ மனத்தே - புகுந்தது இம்மைக்கு'' என்று இருந்தேன்‌ எறி நீர்‌ வளஞ்செறுவில்‌ ர்‌ செந்நெற்‌ கூழை வரம்பொர்‌இ அரிவார்‌ முகத்தெழு' வாளை போய்‌ - கரும்பு அந்நற்காடு அணையும்‌ அணியாலி அம்மானே!

1191

மின்னில்‌ மன்னு நுடங்கிடை மடவார்‌ தம்‌ சிந்தை மறந்து வந்து நின்‌ மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்‌ புன்னை மன்னு செருந்தி வண்‌ பொழில்‌ வாய்‌ அகன்பணைகள்‌ கலந்து எங்கும்‌ அன்னம்‌ மன்னும்‌ வயல்‌ அணியாலி அம்மானே!

1192

நீடு பல்மலர்‌ மாலை இட்டு நின்‌ இணையடி தொழுது ஏத்தும்‌ என்‌ மனம்‌ வாட நீ நினையேல்‌ மரம்‌ எய்த மாமுனிவா! பாடலின்‌ ஒலி சங்கின்‌ ஓசை பரந்து பல்பணையால்‌ மலிந்து எங்கும்‌ 7? இன்மைக்கு '" முகத்தெழ ஆடல்‌ ஓசை அறா அணியாலி அம்மானே!

1193

கந்த மாமலர்‌ எட்டும்‌ இட்டு நின்‌ காமர்‌ சேவடி கை தொழுது எழும்‌ புற்தியேன்‌ மனத்தே புகுந்தாயைப்‌ போகல்‌ ஒட்டேன்‌ சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய்‌ வரும்‌ அந்தணாளர்‌ அறா அணியாலி அம்மானே!

1194

உலவு திரைக்‌ கடல்‌ பள்ளி கொண்டு வந்து உன்‌ அடியேன்‌ மனம்‌ - புகுந்த அப்‌ புலவ! புண்ணியனே! புகுந்தாயைப்‌ போகல்‌ ஒட்டேன்‌ நிலவு மலர்ப்‌ புன்னை நாழல்‌ நீழல்‌ தண்‌ தாமரை மலரின்‌ மிசை மலி அலவன்‌ கண்‌ படுக்கும்‌ அணியாலி அம்மானே!

1195

சங்கு தங்கு தடங்கடல்‌ கடல்‌ மல்லையுள்‌ கிடந்தாய்‌! அருள்‌ புரிந்து இங்கு என்னுள்‌ புகுந்தாய்‌! இனிப்‌ போயினால்‌ அறையோ! கொங்கு செண்பக மல்லிகை மலர்‌ புல்கி இன்னிள வண்டு போய்‌ இளந்‌ தெங்கின்‌ தாதளையும்‌ திருவாலி அம்மானே!

1196

ஓதி ஆயிர நாமமும்‌ பணிந்தேத்தி நின்‌ அடைந்தேற்கு ஒரு பொருள்‌ வேதியா! அரையா! உரையாய்‌ ஒரு மாற்றம்‌ எந்தாய்‌! நீதியாகிய வேத மாமுனியாளர்‌ தோற்றம்‌ உரைத்து மற்றவர்க்கு ஆதியாய்‌ இருந்தாய்‌! அணியாலி அம்மானே!

1197

புல்லி வண்டறையும்‌ பொழில்‌ புடை சூழ்‌ தென்னாலி இருந்த மாயனை கல்லின்‌ மன்னு திண்‌ தோள்‌ கலியன்‌ ஒலி செய்த நல்ல இன்னிசை மாலை நாலும்‌ ஓர்‌ ஐந்தும்‌ ஒன்றும்‌ நவின்று தாம்‌ உடன்‌ வல்லராய்‌ உரைப்பார்க்கு இடமாகும்‌ வானுலகே

அடிவரவு: வந்து நீல நென்னல்‌ மின்னின்‌ நீடு கந்தம்‌ உலவு சங்கு ஓதி புல்லி தூவிரிய