Skip to the text
பெரிய திருமொழி

3-4. ஒரு குறளாய்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

ஒரு குறளாய்ச் சென்று மூவடி மண் கேட்டு, இரண்டடியால் உலகனைத்தையும் ஒடுக்கிய வாமன அவதாரப் பதிகம். சிறியவனாய்ச் சென்று பெரியவனாய் நிமிர்ந்த அக்காட்சியை ஆழ்வார் விரும்பிச் சொல்கிறார். கேட்டுப் பெறுவதே அவனுடைய வழி — பறிப்பதல்ல என்பது நுட்பமாக உணர்த்தப்படுகிறது.

பெரிய திருமொழி 3-4 - ஒரு குறளாய்‌ (திருக்காழிச்‌ சீராமவிண்ணகரம்‌)

1178

ஒரு குறளாய்‌ இருநிலம்‌ மூவடி மண்‌ வேண்டி உலகனைத்தும்‌ ஈரடியால்‌ ஒடுக்கி ஒன்றும்‌ தருகவெனா மாவலியைச்‌ சிறையில்‌ வைத்த தாடாளன்‌ தாளணைவீர்‌! தக்க கீர்த்தி அருமறையின்‌ திரள்‌ நான்கும்‌ வேள்வி ஐந்தும்‌ 7! மருவார்‌ தம்‌ அங்கங்கள்‌ அவை ஆறும்‌ இசைகள்‌ ஏழும்‌ தெருவில்‌ மலி விழா வளமும்‌ சிறக்கும்‌ காழிச்‌ சீராமவிண்ணகரே சேர்மினீரே

1179

நான்முகன்‌ நாள்‌ மிகைத்‌ தருக்கை இருக்கு வாய்மை நலமிகு சீர்‌ உரோமசனால்‌ நவிற்றி நக்கன்‌ ஊன்‌ முகமார்‌ தலையோட்டூண்‌ ஒழித்த எந்தை ஒளிமலர்ச்‌ சேவடி அணைவீர்‌! உழுசேயோடச்‌ சூல்‌ முகமார்‌ வளையளைவாய்‌ உகுத்த முத்தைத்‌ தொல்‌ குருகு சினை என்னச்‌ சூழ்ந்தியங்க தேன்‌ முகமார்‌ கமல வயல்‌ சேல்‌ பாய்‌ காழிச்‌ சீராமவிண்ணகரே சேர்மினீரே 2.

1180

வையணைந்த நுதிக்கோட்டு வராகம்‌ ஒன்றாய்‌ மண்ணெல்லாம்‌ இடந்து எடுத்து மதங்கள்‌ செய்து நெய்யணைந்த திகிரியினால்‌ வாணன்‌ திண்‌ தோள்‌ நேர்ந்தவன்‌ தாளணைகிற்பீர்‌! நெய்தலோடு மையணைந்த குவளைகள்‌ தம்‌ கண்கள்‌ என்றும்‌ மலர்க்‌ குழுதம்‌ வாய்‌ என்றும்‌ கடைசிமார்கள்‌ செய்யணைந்து களை களையாதேறும்‌ காழிச்‌ சீராமவிண்ணகரே சேர்மினீரே

1181

பஞ்சிய மெல்லடிப்‌ பின்னை திறத்து முன்னாள்‌ பாய்விடைகள்‌ ஏழடர்த்து பொன்னன்பைம்பூண்‌ நெஞ்சிடந்து குருதியுக உகிர்‌ வேலாண்ட நின்மலன்‌ தாளணைகிற்பீர்‌! நீல மாலைத்‌ தஞ்சுடைய இருள்‌ தழைப்பத்‌ தரளம்‌ ஆங்கே தண்‌ மதியின்‌ நிலாக்‌ காட்டப்‌ பவளம்‌ தன்னால்‌ செஞ்சுடர்‌ வெயில்‌ விரிக்கும்‌ அழகார்‌ காழிச்‌ சீராமவிண்ணகரே சேர்மினீரே

1182

தெவ்வாய மற மன்னர்‌ குருதி கொண்டு திருக்குலத்தில்‌ இறந்தோர்க்குத்‌ திருத்தி செய்து வெவ்வாய மாகீண்டு வேழம்‌ அட்ட விண்ணவர்‌ கோன்‌ தாளணைவீர்‌! விகிர்த மாதர்‌ அவ்வாய வாள்‌ நெடூங்கண்‌ குவளை காட்ட அரவிந்தம்‌ முகம்‌ காட்ட அருகே ஆம்பல்‌ செவ்வாயின்‌ திரள்‌ காட்டும்‌ வயல்‌ சூழ்‌ காழிச்‌ சீராமவிண்ணகரே சேர்மினீரே 5 "' நவிற்று

1183

பைங்கண்‌ விறல்‌ செம்முகத்து வாலி மாளப்‌ படர்‌ வனத்துக்‌ கவந்தனொடும்‌ படையார்‌ திண்‌ கை வெங்கண்‌ விறல்‌ விராதன்‌ உ௧ விற்குனித்த விண்ணவர்‌ கோன்‌ தாளணைவீர்‌! வெற்புப்‌ போலும்‌ துங்கமுக மாளிகை மேல்‌ ஆயங்கூறும்‌ துடி இடையார்‌ முகக்‌ கமல்ச்‌ சோதி தன்னால்‌ திங்கள்‌ முகம்‌ பனி படைக்கும்‌ அழகார்‌ காழிச்‌ சீராமவிண்ணகரே சேர்மினீரே

1184

பொருவில்‌ வலம்புரி அரக்கன்‌ முடிகள்‌ பத்தும்‌ புற்றுமறிந்தன போலப்‌ புவி மேல்‌ சிந்த செருவில்‌ வலம்புரி சிலைக்‌ கை மலைத்‌ தோள்‌ வேந்தன்‌ திருவடி சேர்ந்து உய்கிற்பீர்‌! திரை நீர்த்தெள்கி மருவி வலம்புரி கைதைக்‌ கழியூடாடி வயல்‌ நண்ணி மழை தரு நீர்‌ தவழ்‌ கால்‌ மன்னி தெருவில்‌ வலம்புரி தரளம்‌ ஈனும்‌ காழிச்‌ சீராமவிண்ணகரே சேர்மினீரே

1185

பட்டரவேரகல்‌ அல்குல்‌ பவளச்‌ செவ்வாய்‌ பணை நெடுந்தோள்‌ பிணை நெடுங்கண்‌ பாலாம்‌ இன்‌ சொல்‌ மட்டவிழும்‌ குழலிக்கா வானோர்‌ காவில்‌ மரம்‌ கொணர்ந்தான்‌ அடியணைவீர்‌! அணில்கள்‌ தாவ நெட்டிலைய கருங்கழுகின்‌ செங்காய்‌ வீழ நீள்‌ பலவின்‌ தாழ்‌ சினையில்‌ நெருங்கு பீனத்‌ தெட்ட பழம்‌ சிதைந்து மதுச்‌ சொரியும்‌ காழிச்‌ சீராமவிண்ணகரே சேர்மினீரே

1186

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப்‌ பிரமனைத்‌ தன்‌ உந்தியிலே தோற்றுவித்து கறை தங்கு வேல்‌ தடங்கண்‌ திருவை மார்பில்‌ கலந்தவன்‌ தாளணைகிற்பீர்‌! கழுநீர்‌ கூடித்‌ துறை தங்கு கமலத்துத்‌ துயின்று கைதைத்‌ தோடாரும்‌ பொதி சோற்றுச்‌ சுண்ணம்‌ நண்ணி சிறை வண்டு களி பாடும்‌ வயல்‌ சூழ்‌ காழிச்‌ சீராமவிண்ணகரே சேர்மினீரே

1187

செங்கமலத்து அயன்‌ அனைய மறையோர்‌ காழிச்‌ சீராம விண்ணகர்‌ என்‌ செங்கண்‌ மாலை அங்கமலத்‌ தடவயல்‌ சூழ்‌ ஆலி நாடன்‌ அருள்மாரி அரட்டமுக்கி அடையார்‌ சீயம்‌ விண்ணகரின்‌ கொங்கு மலர்க்‌ குழலியர்‌ வேள்‌ மங்கை வேந்தன்‌ கொற்றவேல்‌ பரகாலன்‌ கலியன்‌ சொன்ன சங்க முகத்‌ தமிழ்‌ மாலை பத்தும்‌ வல்லார்‌ தடங்கடல்‌ சூழ்‌ உலகுக்குத்‌ தலைவர்‌ தாமே

அடிவரவு: ஒருகுறள்‌ நான்முகன்‌ வை பஞ்சிய தெவ்வாய பைங்கண்‌ பொருவில்‌ பட்டு பிறை செங்கமலத்து வந்து