Skip to the text
பெரிய திருமொழி

2-8. திரிபுரம்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

திரிபுரம் எரித்தவனும், மலர்மேல் அயனும் வியக்கும்படியான பெருமையை ஆழ்வார் சொல்லும் பதிகம். பிற தெய்வங்களைத் தாழ்த்துவதற்காக அல்ல, அவர்களே வியந்து நிற்கும் ஒருவனைச் சுட்டிக்காட்டவே இவ்வொப்பீடு. கடல் போன்ற அவனது பெருமையை அளக்க யாராலும் இயலாது என்பதே முடிவு.

பெரிய திருமொழி 2-8 - திரிபுரம்‌ (திரு அட்டபுயகரம்‌)

1118

ர திரிபுரம்‌ மூன்று எரித்தானும்‌ மற்றை மலர்‌ மிசை மேல்‌ அயனும்‌ வியப்ப முரி திரை மாகடல்‌ போல்‌ முழங்கி மூவுலகும்‌ முறையால்‌ வணங்க எரியன கேசர வாள்‌ எயிற்றோடு இரணியன்‌ ஆகம்‌ இரண்டு கூறா அரி உருவாம்‌ இவரார்‌ கொல்‌? என்ன அட்டபுயகரத்தேன்‌ என்றாரே

1119

வெந்திறல்‌ வீரரில்‌ வீரர்‌ ஒப்பார்‌ வேதம்‌ உரைத்து இமையோர்‌ வணங்கும்‌ செந்தமிழ்‌ பாடூவார்‌ தாம்‌ வணங்கும்‌ தேவர்‌ இவர்‌ கொல்‌? தெரிக்க - மாட்டேன்‌ வந்து குறள்‌ உருவாய்‌ நிமிர்ந்து மாவலி வேள்வியில்‌ மண்‌ அளந்த அந்தணர்‌ போன்று இவரார்‌ கொல்‌? என்ன அட்டபுயகரத்தேன்‌ - என்றாரே

1120

செம்பொன்‌ இலங்கு வலங்கை வாளி திண்‌ சிலை தண்டொடு சங்கம்‌ - ஒள்‌ வாள்‌ உம்பர்‌ இருசுடர்‌ ஆழியோடு கேடகம்‌ ஒண்மலர்‌ பற்றி எற்றே! வெம்பு சினத்து அடல்‌ வேழம்‌ வீழ வெண்மருப்பொன்று பறித்து இருண்ட அம்புதம்‌ போன்று இவரார்‌ கொல்‌? என்ன அட்டபுயகரத்தேன்‌ - என்றாரே

1121

மஞ்சுயர்‌ மாமணிக்‌ குன்றம்‌ ஏந்தி மாமழை காத்து ஒரு மாயவானை அஞ்ச அதன்‌ மருப்பு அன்று! வாங்கும்‌ ஆயர்‌ கொல்‌? மாயம்‌ அறிய - மாட்டேன்‌ வெஞ்சுடர்‌ ஆழியும்‌ சங்கும்‌ ஏந்தி வேதம்‌ முன்‌ ஓதுவர்‌ நீதி வானத்து அஞ்சுடர்‌ போன்று இவரார்‌ கொல்‌? என்ன அட்டபுயகரத்தேன்‌ - என்றாரே

1122

கலைகளும்‌ வேதமும்‌ நீதி நூலும்‌ கற்பமும்‌ சொற்பொருள்‌ தானும்‌ மற்றை நிலைகளும்‌ வானவர்க்கும்‌ பிறர்க்கும்‌ நீர்மையினால்‌ அருள்‌ செய்து - நீண்ட மலைகளும்‌ மாமணியும்‌ மலர்மேல்‌ மங்கையும்‌ சங்கமும்‌ தங்குகின்ற அலைகடல்‌ போன்று இவரார்‌ கொல்‌? என்ன அட்டபுயகரத்தேன்‌ - என்றாரே 5 8! பொன்று

1123

எங்ஙனும்‌ நாம்‌ இவர்‌ வண்ணம்‌ எண்ணில்‌ ஏதும்‌ அறிகிலம்‌ ஏந்திழையார்‌ சங்கும்‌ மனமும்‌ நிறைவும்‌ எல்லாம்‌ தம்‌ மனவாகப்‌ புகுந்து தாமும்‌ பொங்கு கருங்கடல்‌ பூவை காயா போதவிழ்‌ நீலம்‌ புனைந்த மேகம்‌ அங்ஙனம்‌ போன்று இவரார்‌ கொல்‌? என்ன அட்டபுயகரத்தேன்‌ - என்றாரே

1124

முழுசி வண்டாடிய தண்‌ துழாயின்‌ மொய்ம்மலர்க்‌ கண்ணியும்‌ மேனி - அஞ்சாந்‌ திழுசிய கோலம்‌ இருந்தவாறும்‌ எங்ஙனம்‌ சொல்லுகேன்‌? ஓவி நல்லார்‌ எழுதிய தாமரை அன்ன கண்ணும்‌ ஏந்தெழில்‌ ஆகமும்‌ தோளும்‌ வாயும்‌ அழகியதாம்‌ இவரார்‌ கொல்‌? என்ன அட்டபுயகரத்தேன்‌ என்றாரே

1125

மேவி எப்பாலும்‌ விண்ணோர்‌ வணங்க வேதம்‌ உரைப்பர்‌ முந்நீர்‌ மடந்தை தேவி அப்பால்‌ அதிர்‌ சங்கம்‌ இப்பால்‌ சக்கரம்‌ மற்றிவர்‌ வண்ணம்‌ - எண்ணில்‌ காவி ஒப்பார்‌ கடலேயும்‌ ஒப்பார்‌ கண்ணும்‌ வடிவும்‌ நெடியராய்‌ என்‌ ஆவி ஒப்பார்‌ இவரார்‌ கொல்‌? என்ன அட்டபுயகரத்தேன்‌ என்றாரே

1126

தஞ்சம்‌ இவர்க்கு என்‌ வளையும்‌ நில்லா நெஞ்சமும்‌ தம்மதே சிந்தித்தேற்கு வஞ்சி மருங்குல்‌ நெருங்க நோக்கி வாய்‌ திறந்து ஒன்று பணித்தது - உண்டு நஞ்சமுடைத்து இவர்‌ நோக்கும்‌ நோக்கம்‌ நான்‌ இவர்‌ தம்மை அறிய - மாட்டேன்‌ அஞ்சுவன்‌ மற்று இவரார்‌ கொல்‌? என்ன அட்டபுயகரத்தேன்‌ - என்றாரே

1127

மன்னவன்‌ தொண்டையர்‌ கோன்‌ வணங்கும்‌ நீள்முடி மாலை வயிர - மேகன்‌ தன்‌ வலி தன்‌ புகழ்‌ சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி தன்னை ர்‌ கன்னிநன்‌ மாமதிள்‌ மங்கை வேந்தன்‌ காமருசீர்க்‌ கலிகன்றி குன்றா இன்னிசையால்‌ சொன்ன செஞ்சொல்‌ மாலை ஏத்த வல்லார்க்கு இடம்‌ - வைகுந்தமே

அடிவரவு: திரிபுரம்‌ வெந்திறல்‌ செம்பொன்‌ மஞ்சு கலைகளும்‌ எங்ஙனும்‌ முழுசி மேவி தஞ்சம்‌ மன்னவன்‌ சொல்லு