அன்றாயர் குலக் கொடியோடு அணிமாமலர் மங்கையொடு - அன்பளவி அவுணர்க்கு என்தானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடமாவது - இரும்பொழில் சூழ் நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல் நகர் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மாமலையாவது - நீர்மலையே
2-4. அன்றாயர்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
ஆயர் குலக் கொடியோடும் மலர்மங்கையோடும் அன்பு கலந்திருப்பவன், அரக்கர்க்கு மட்டும் சிறிதும் இரக்கம் காட்டாதவன் என்று ஆழ்வார் பாடுகிறார். ஒரே இறைவனிடம் இரண்டு முகங்கள் இருப்பதை — அன்புக்கு உரியவர்க்கு எளியவனாகவும், கொடியவர்க்குக் கடியவனாகவும் — இப்பதிகம் தெளிவாகக் காட்டுகிறது.
பெரிய திருமொழி 2-4 - அன்றாயர் (திருநீர்மலை)
காண்டா வனம் என்பதோர் காடு அமரர்க்கரை அன்னது கண்டவன் - நிற்க முனே மூண்டார் அழல் உண்ண முனிந்ததுவும் அதுவன்றியும் முன்னுலகம் - பொறை தீர்த்து ஆண்டான் அவுணன் அவன் மார்பகலம் உகிரால் வகிராக - முனிந்து அரியாய் நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கு இடம் மாமலையாவது - நீர்மலையே
அலமன்னுமடல் சுரிசங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணியார் - உருவின் புலமன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முனாள் - அடுவாளமரில் பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி - கொண்டு அணிசேர் நில மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மாமலையாவது - நீர்மலையே
தாங்காததொர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்து அவனாலமரும் பூங்கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்து அதுவன்றியும் வென்றி- கொள் வாளமரில் பாங்காக முன் ஐவரொடு அன்பளவிப் பதிற்றைந்திரட்டிப் படை வேந்தர் - பட நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மாமலையாவது - நீர்மலையே
மாலும் கடலார மலைக்குவடிட்டு அணை கட்டி வரம்புருவ மதி சேர் கோல மதிளாய இலங்கை கெடப் படை தொட்டு ஒருகால் அமரில் - அதிர வ் மடுத்து காலம் இதுவென்று அயன் வாளியினால் கதிர் நீள்முடி பத்தும் அறுத்து - அமரும் நீலமுகில் வண்ணர் எமக்கு இறைவற்கு இடம் மாமலையாவது - நீர்மலையே
பாரார் உலகும் பனிமால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் - எனக்கு ஆராதென நின்றவன் எம்பெருமான் அலை நீர் உலகுக்கு அரசாகிய - அப் பேரானை முனிந்த முனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனும் - எல்லையினான் நீரார் பேரான் நெடுமால் அவனுக்கு இடம் மாமலையாவது - நீர்மலையே
புகரார் உருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு - அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து அதுவன்றியும் வென்றிகொள் வாள் - அவுணன் பகராதவன் ஆயிர நாமம் அடிப் பணியாதவனைப் பணியால் அமரில் நிகராயவன் நெஞ்சிடந்தான் அவனுக்கு இடம் மாமலையாவது - நீர்மலையே
பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில் பிணந்தின் மடவார் அவர் போல் - அங்ஙனே அச்சமிலர் நாணிலரா தன்மையால் அவர் செய்கை வெறுத்து அணிமாமலர் - தூய் நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள் செய் என உள் குழைந்து - ஆர்வமொடு நிச்சம் நினைவார்க்கு அருள் செய்யும் அவற்கு இடம் மாமலையாவது - நீர்மலையே
பேசும் அளவன்று இது வம்மின் நமர்! பிறர் கேட்பதன் முன் பணிவார் - வினைகள் நாசமது செய்திடூுமா தன்மையால் அதுவே நமது உய்விடம் நாள்மலர் - மேல் வாசமணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்துழல்வார் மதியில் நீசரவர் சென்று அடையாதவனுக்கு இடம் மாமலையாவது - நீர்மலையே
நெடுமால் அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் - கோன் அமரில் வண்ணன் கடமா களியானை வல்லான் கலியன் ஒலி செய் தமிழ் மாலை - வல்லார்க்கு ் உடனே விடுமால் வினை வேண்டுடில் மேலுலகும் எளிதாயிடும் அன்றி - இலங்கொலி சேர் கொடூமா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி - கூடுவரே
அடிவரவு: அன்றாயர் காண்டா அலம் தாங்காது மாலும் பார் புகர் பிச்சம் பேசும் நெடுமால் பாராயது