விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை ர் பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் - நின்றானை சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
2-3. விற்பெரு விழவும்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
வில்விழா, கஞ்சன், மல்லர், யானையும் பாகனும் — ஒரே நாளில் வீழ்ந்த அனைவரையும் வரிசையாகச் சொல்லும் பதிகம். மதுரைக்குச் சென்ற சிறுவன் ஒருவனால் ஓர் அரசே முடிவுக்கு வந்ததை ஆழ்வார் நினைவுகூர்கிறார். வலிமையின் முன் அல்ல, நீதியின்மையின் முன்பே அவன் நின்றான் என்பதே இதன் உட்பொருள்.
பெரிய திருமொழி 2-3 - விற்பெரு விழவும் (திருவல்லிக்கேணி)
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும் கோதில் இன் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் - தொழுதேத்தும் ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலையூடு உயிர் செக உண்ட நாதனைத் தானவர் கூற்றை விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி அஞ்சுவை அமுதம் அன்றளித்தானைத் திருவல்லிக்கேணிக் - கண்டேனே
இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய் மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர் எந்தம்மோடு இன ஆனிரை தளராமல் எம்பெருமான்! அருள் என்ன அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக்கேணிக் - கண்டேனே
இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு - இறைவன் தன்துணை ஆயர்பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் இது கோவில் திருமொழி வன்துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என்துணை? எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் - கண்டேனே
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கிளையவன் அணியிழையைச் சென்று எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது எம்பெருமான்! அருள் என்ன சந்தமர்! குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் - இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவும் நன்பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் - கண்டேனே
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓராயிர நாமம் ஒள்ளியவாகிப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் - விழிப் பேழ் வாய் தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
மீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு - சென்றிழிந்த கானமர் வேழம் கை எடுத்தலறக் கரா அதன் காலினைக் கதுவ ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும் தென்னன் தொண்டையர் கோன் செய்த நல்மயிலைத் திருவல்லிக்கேணி - நின்றானை கன்னி நன்மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலி கன்றி சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகம் இனிதாள்வர் - வானுலகே
அடிவரவு: வில் வேதத்தை வஞ்சனை இந்திரனுக்கு இன்துணை அந்தகன் பரதன் பள்ளியில் மீனமர் மன்னு அன்றாயர் இன்துணை *! சந்தமல்