Skip to the text
பெரிய திருமொழி

1-10. கண்ணார் கடல் சூழ்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

இலங்கை மன்னனின் திண்ணாகம் பிளக்க அம்பு செலுத்தியவனை விளித்துப் பாடும் பதிகம். இராம அவதாரத்தின் இறுதிச் செயலை நினைவுகூர்ந்து, அப்பெருமானின் திருவடிகளையே சரணாக ஏற்கிறார். முதற்பத்து இவ்வாறு வெற்றியிலும் சரணாகதியிலும் ஒருசேர நிறைவடைகிறது.

பெரிய திருமொழி 1-10 - கண்ணார்‌ கடல்‌ சூழ்‌ (திருவேங்கடம்‌ 3)

1038

கண்ணார்‌ கடல்‌ சூழ்‌ இலங்கைக்கு இறைவன்‌ தன்‌ திண்ணாகம்‌ பிளக்கச்‌ சரம்‌ செல உய்த்தாய்‌! விண்ணோர்‌ தொழும்‌ வேங்கட மாமலை மேய அண்ணா! அடியேன்‌ இடரைக்‌ களையாயே

1039

இலங்கைப்‌ பதிக்கு அன்று இறையாய அரக்கர்‌ குலம்‌ கெட்டு அவர்‌ மாளக்‌ கொழுப்புள்‌ திரித்தாய்‌! விலங்கல்‌ குடுமித்‌ திருவேங்கடம்‌ மேய அலங்கல்‌ துளப முடியாய்‌! அருளாயே

1040

நீரார்‌ கடலும்‌ நிலனும்‌ முழுதுண்டு ஏர்‌ ஆலம்‌ இளந்தளிர்‌ மேல்‌ துயில்‌ எந்தாய்‌! சீரார்‌ திருவேங்கட மாமலை மேய ஆராவமழுதே! அடியேற்கு அருளாயே

1041

உண்டாய்‌ உறி மேல்‌ நறுநெய்‌ அழுதாக கொண்டாய்‌ குறளாய்‌ நிலம்‌ ஈரடியாலே விண்தோய்‌ சிகரத்‌ திருவேங்கடம்‌ மேய அண்டா! அடியேனுக்கு அருள்‌ புரியாயே

1042

தூணாய்‌ அதனூடு அரியாய்‌ வந்து தோன்றி பேணா அவுணன்‌ உடலம்‌ பிளந்திட்டாய்‌! சேணார்‌ திருவேங்கட மாமலை மேய கோணாகணையாய்‌! குறிக்கொள்‌ எனை நீயே

1043

மன்னா இம்மனிசப்‌ பிறவியை நீக்கி தன்னாகித்‌ தன்‌ இன்னருள்‌ செய்யும்‌ தலைவன்‌ மின்னார்‌ முகில்‌ சேர்‌ திருவேங்கடம்‌ மேய என்னானை என்னப்பன்‌ என்‌ நெஞ்சில்‌ உளானே

1044

மானேய்‌ மடநோக்கி திறத்து எதிர்‌ வந்த ஆனேழ்‌ விடை செற்ற அணிவரைத்‌ தோளா! ர்‌ தேனே! திருவேங்கட மாமலை மேய கோனே! என்‌ மனம்‌ குடி கொண்டு இருந்தாயே

1045

சேயன்‌ அணியன்‌ என சிந்தையுள்‌ நின்ற மாயன்‌ மணிவாள்‌ ஒளி வெண்தரளங்கள்‌ வேய்‌ விண்டு உதிர்‌ வேங்கட மாமலை மேய ஆயன்‌ அடி அல்லது மற்று அறியேனே

1046

வந்தாய்‌ என்‌ மனம்‌ புகுந்தாய்‌ மன்னி நின்றாய்‌! நந்தாத கொழுஞ்சுடரே! எங்கள்‌ நம்பீ! சிந்தாமணியே! திருவேங்கடம்‌ மேய எந்தாய்‌! இனி யான்‌ உன்னை என்றும்‌ விடேனே

1047

வில்லார்‌ மலி வேங்கட மாமலை மேய என்று இறை மல்லார்‌ திரள்‌ தோள்‌ மணிவண்ணன்‌ அம்மானை கல்லார்‌ திரள்‌ தோள்‌ கலியன்‌ சொன்ன மாலை வல்லார்‌ அவர்‌ வானவர்‌ ஆகுவர்‌ தாமே

அடிவரவு: கண்‌ இலங்கை நீர்‌ உண்டாய்‌ தூணாய்‌ மன்னா மானேய்‌ சேயன்‌ வந்தாய்‌ வில்‌ வானவர்‌