Skip to the text
பெரிய திருமொழி

1-9. தாயே தந்தை

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டொழிந்தேன்" — உறவுகளின் மேல் வைத்த பற்றே நோயாய் முடிந்ததை ஆழ்வார் சொல்கிறார். அவற்றை இகழ்வதற்காக அல்ல, அவற்றில் தேடியது அங்கே இல்லை என்பதைச் சொல்வதற்காகவே இது பேசப்படுகிறது. "உன்னைக் காண்பதோர் ஆசையினால்" என்ற ஒரே காரணத்தால் அவை அனைத்தையும் கடந்து வந்ததைத் தெரிவிக்கிறார்.

பெரிய திருமொழி 1-9 - தாயே தந்தை (திருவேங்கடம்‌ 2)

1028

தாயே தந்தை என்றும்‌ தாரமே கிளை மக்கள்‌ என்றும்‌ நோயே பட்டொழிந்தேன்‌ உன்னைக்‌ காண்பதோர்‌ ஆசையினால்‌ வேயேய்‌ பூம்பொழில்‌ சூழ்‌ விரையார்‌ திருவேங்கடவா! நாயேன்‌ வந்தடைந்தேன்‌ நல்கி ஆளென்னைக்‌ கொண்டருளே

1029

மானேய்‌ கண்‌ மடவார்‌ மயக்கில்‌ பட்டு மாநிலத்து நானே நானாவித நரகம்‌ புகும்‌ பாவம்‌ செய்தேன்‌ ர்‌ தேனேய்‌ பூம்பொழில்‌ சூழ்‌ திருவேங்கட மாமலை என்‌ ஆனாய்‌! வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

1030

கொன்றேன்‌ பல்லுயிரைக்‌ குறிக்கோள்‌ ஒன்றிலாமையினால்‌ என்றேனும்‌ இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்‌ குன்றேய்‌ மேகமதிர்‌ குளிர்‌ மாமலை வேங்கடவா! அன்றே வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

1031

குலந்தான்‌ எத்தனையும்‌ பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்‌ நலந்தான்‌ ஒன்றுமிலேன்‌ நல்லதோர்‌ அறம்‌ செய்துமிலேன்‌ நிலம்‌ தோய்‌ நீள்முகில்‌ சேர்‌ நெறியார்‌ திருவேங்கடவா! அலந்தேன்‌ வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே 4 இது கோவில்‌ திருமொழி நுன்னைக்‌

1032

எப்பாவம்‌ பலவும்‌ இவையே செய்து இளைத்தொழிந்தேன்‌ துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும்‌ கிற்கின்றிலேன்‌ செப்பார்‌ திண்‌ வரை சூழ்‌ திருவேங்கட மாமலை என்‌ அப்பா! வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

1033

மண்ணாய்‌ நீர்‌ எரி கால்‌ மஞ்சுலாவும்‌ ஆகாசமுமாம்‌ புண்ணார்‌ ஆக்கை தன்னுள்‌ புலம்பித்‌ தளர்ந்து எய்த்தொழிந்தேன்‌ விண்ணார்‌ நீள்‌ சிகர விரையார்‌ திருவேங்கடவா! அண்ணா! வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

1034

தெரியேன்‌ பாலகனாய்ப்‌ பல தீமைகள்‌ செய்துமிட்டேன்‌ பெரியேன்‌ ஆயின பின்‌ பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்‌ கரி சேர்‌ பூம்பொழில்‌ சூழ்‌ கனமாமலை வேங்கடவா! அரியே! வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

1035

நோற்றேன்‌ பல்பிறவி நுன்னைக்‌ காண்பதோர்‌ ஆசையினால்‌ ஏற்றேன்‌ இப்பிறப்பே இடர்‌ உற்றனன்‌ எம்பெருமான்‌! கோல்தேன்‌ பாய்ந்தொழுகும்‌ குளிர்சோலை சூழ்‌ வேங்கடவா! ஆற்றேன்‌ வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

1036

பற்றேல்‌ ஒன்றுமிலேன்‌ பாவமே செய்து பாவி ஆனேன்‌ மற்றேல்‌ ஒன்றறியேன்‌ மாயனே! எங்கள்‌ மாதவனே! கல்தேன்‌ பாய்ந்தொழுகும்‌ கமலச்‌ சுனை வேங்கடவா! அற்றேன்‌ வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

1037

கண்ணாய்‌ ஏழுலகுக்கு உயிராய எங்கார்‌ வண்ணனை விண்ணோர்‌ தாம்‌ பரவும்‌ பொழில்‌ வேங்கட வேதியனை திண்ணார்‌ மாடங்கள்‌ சூழ்‌ திருமங்கையர்‌ கோன்‌ கலியன்‌ பண்ணார்‌ பாடல்‌ பத்தும்‌ பயில்வார்க்கு இல்லை பாவங்களே

அடிவரவு: தாய்‌ மான்‌ கொன்றேன்‌ குலம்‌ எப்பாவம்‌ மண்‌ தெரியேன்‌ நோற்றேன்‌ பற்றேல்‌ கண்ணாய்‌ கண்‌