Skip to the text
பெரிய திருமொழி

1-8. கொங்கலர்ந்த

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

குருந்த மரத்தை முறித்த கோவலனையும், சங்கு தங்கும் கடலில் துயிலும் தாமரைக்கண்ணனையும் ஒருசேரப் பாடும் பதிகம். ஆயர்பாடிச் சிறுவனும் பாற்கடலில் பள்ளிகொண்டவனும் ஒருவரே என்பதை ஆழ்வார் இணைத்துக் காட்டுகிறார். எளிமையும் பெருமையும் ஒன்றையொன்று விளக்கும் விதம் இப்பதிகத்தில் தெளிவாகிறது.

பெரிய திருமொழி 1-8 - கொங்கலர்ந்த (திருவேங்கடம்‌ 1) ஊடெரிய சிங்கவேழ்‌ சிங்கவேழ்‌ 4 சிங்கவேழ்‌ ? சிங்கவேழ்‌ ? சிங்கவேழ்‌ சிங்கவேழ்‌

1018

கொங்கலர்ந்த மலர்க்‌ குருந்தம்‌ ஒசித்த ர்‌ கோவலன்‌ எம்பிரான்‌ சங்கு தங்கு தடங்கடல்‌ துயில்‌ கொண்ட தாமரைக்‌ கண்ணினன்‌ பொங்கு புள்ளினை வாய்‌ பிளந்த புராணர்‌ தம்மிடம்‌ பொங்கு நீர்ச்‌ செங்கயல்‌ திளைக்கும்‌ சுனைத்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

1019

பள்ளியாவது பாற்கடல்‌ அரங்கம்‌ இரங்கவன்‌ பேய்முலை பிள்ளையாய்‌ உயிருண்ட எந்தை பிரான்‌ அவன்‌ பெருகுமிடம்‌ வெள்ளியான்‌ கரியான்‌ மணிநிற வண்ணன்‌ என்றெண்ணி நாள்‌ தொறும்‌ தெள்ளியார்‌ வணங்கும்‌ மலைத்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

1020

நின்ற மாமருது இற்று வீழ நடந்த நின்மலன்‌ நேமியான்‌ என்றும்‌ வானவர்‌ கை தொழும்‌ இணைத்‌ தாமரை அடி எம்பிரான்‌ கன்றி மாரி பொழிந்திடக்‌ கடிது ஆறிரைக்கு இடர்‌ நீக்குவான்‌ சென்று குன்றம்‌ எடுத்தவன்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

1021

பார்த்தற்காய்‌ அன்று பாரதம்‌ கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்‌ கோத்து அங்கு ஆயர்‌ தம்‌ பாடியில்‌ குரவை பிணைந்த எம்‌ கோவலன்‌ ஏத்துவார்‌ தம்‌ மனத்துள்ளான்‌ இடவெந்தை மேவிய எம்பிரான்‌ தீர்த்த நீர்த்‌ தடஞ்சோலை சூழ்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

1022

வண்கையான்‌ அவுணர்க்கு நாயகன்‌ வேள்வியில்‌ சென்று மாணியாய்‌ மண்‌ கையால்‌ இரந்தான்‌ மராமரம்‌ ஏழும்‌ எய்த வலத்தினான்‌ எண்‌ கையான்‌ இமயத்துள்ளான்‌ இருஞ்சோலை மேவிய எம்பிரான்‌ திண்‌ கைம்மா துயர்‌ தீர்த்தவன்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

1023

எண்திசைகளும்‌ ஏழுலகமும்‌ வாங்கிப்‌ பொன்‌ வயிற்றில்‌ பெய்து பண்டு ஓர்‌ ஆலிலைப்‌ பள்ளி கொண்டவன்‌ பால்மதிக்கு இடர்‌ தீர்த்தவன்‌ ஒண்திறல்‌ அவுணன்‌ உரத்து உகிர்‌ வைத்தவன்‌ ஒள்‌ எயிற்றொடு திண்திறல்‌ அரி ஆயவன்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

1024

பாரும்‌ நீர்‌ எரி காற்றினோடு ஆகாசமும்‌ இவை ஆயினான்‌ பேரும்‌ ஆயிரம்‌ பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்‌ காரும்‌ வார்பனி நீள்விசும்பிடைச்‌ சோரு! மாழுகில்‌ தோய்‌ தர சேரும்‌ வார்பொழில்‌ சூழ்‌ எழில்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

1025

அம்பரம்‌ அனல்‌ கால்‌ நிலம்‌ சலமாகி நின்ற அமரர்‌ கோன்‌ வம்புலாம்‌ அலர்‌ மேல்‌ மலிமட மங்கை தன்‌ கொழுனன்‌ அவன்‌ கொம்பின்‌ அன்ன இடை மடக்‌ குறமாதர்‌ நீளிதணந்தொறும்‌ செம்புனம்மவை காவல்‌ கொள்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

1026

பேசுமின்‌ திருநாமம்‌ எட்டெழுத்தும்‌ சொல்லி நின்று பின்னரும்‌ பேசுவார்‌ தமை உய்ய வாங்கிப்‌ பிறப்பு அறுக்கும்‌ பிரானிடம்‌ வாச மாமலர்‌ நாறுவார்‌ பொழில்சூழ்‌ தரும்‌ உலகுக்கெல்லாம்‌ தேசமாய்த்‌ திகழும்‌ மலை திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

1027

செங்கயல்‌ திளைக்கும்‌ சுனைத்‌ திருவேங்கடத்து உறை செல்வனை மங்கையர்‌ தலைவன்‌ கலிகன்றி வண்தமிழ்ச்‌ செஞ்சொல்‌ மாலைகள்‌ சங்கை இன்றித்‌ தரித்து உரைக்க வல்லார்கள்‌ தஞ்சமதாகவே வங்க மாகடல்‌ வையம்‌ காவலராகி வானுலகு ஆள்வரே

அடிவரவு: கொங்கு பள்ளி நின்ற பார்த்தற்கு வண்கையான்‌ எண்திசைகள்‌ பார்‌ அம்பரம்‌ பேசுமின்‌ செங்கயல்‌ தாய்‌