Skip to the text
பெரிய திருமொழி

1-7. அங்கண் ஞாலம்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"அங்கண் ஞாலம் அஞ்ச" — உலகமே நடுங்க நரசிங்கமாய்த் தோன்றி இரணியனின் மார்பைப் பிளந்த புனிதனைப் பாடும் பதிகம். அச்சம் தரும் வடிவமும் காக்கும் கருணையும் ஒரே செயலில் இணைந்திருப்பதை ஆழ்வார் காட்டுகிறார். அவ்வடிவம் எழுந்த இடத்தையும் ஒவ்வொரு பாசுரமும் நினைவுபடுத்துகிறது.

பெரிய திருமொழி 1-7 - அங்கண்‌ ஞாலம்‌ (சிங்கவேள்‌ குன்றம்‌)

1008

அங்கண்‌ ஞாலம்‌ அஞ்ச அங்கோர்‌ ஆளரியாய்‌ அவுணன்‌ பொங்க ஆகம்‌ வள்ளுகிரால்‌ போழ்ந்த புனிதனிடம்‌ பைங்கண்‌ ஆனைக்‌ கொம்பு கொண்டு பத்திமையால்‌ அடிக்‌ கீழ்ச்‌ செங்கணாளி இட்டிறைஞ்சும்‌ சிங்கவேள்‌ குன்றமே

1009

அலைத்த பேழ்‌ வாய்‌ வாள்‌ எயிற்றோர்‌ கோளரியாய்‌ அவுணன்‌ கொலைக்‌ கையாளன்‌ நெஞ்சிடந்த கூருகிராளனிடம்‌ மலைத்த செல்‌ சாத்தெறிந்த பூசல்‌ வந்துடிவாய்‌ கடுப்ப சிலைக்‌ கை வேடர்‌ தெழிப்பறாத சிங்கவேள்‌ குன்றமே

1010

ஏய்ந்த பேழ்‌ வாய்‌ வாள்‌ எயிற்றோர்‌ கோளரியாய்‌ அவுணன்‌ வாய்ந்த ஆகம்‌ வள்ளுகிரால்‌ வகிர்ந்த அம்மானதனிடம்‌ ஓய்ந்த மாவும்‌ உடைந்த குன்றும்‌ அன்றியும்‌ நின்றழலால்‌ தேய்ந்த வேயும்‌ அல்லதில்லாச்‌ சிங்கவேள்‌! குன்றமே

1011

எவ்வம்‌! வெவ்வேல்‌ பொன்‌ பெயரோன்‌ ஏதலன்‌ இன்னுயிரை வவ்வி ஆகம்‌ வள்ளுகிரால்‌ வகிர்ந்த அம்மானதிடம்‌ கவ்வு நாயும்‌ கழுகும்‌ உச்சிப்‌ போதொடுகால்‌ சுழன்று தெய்வம்‌ அல்லால்‌ செல்ல ஒண்ணாச்‌ சிங்கவேள்‌ குன்றமே

1012

மென்ற பேழ்‌ வாய்‌ வாள்‌ எயிற்றோர்‌ கோளரியாய்‌ அவுணன்‌ பொன்ற ஆகம்‌ வள்ளுகிரால்‌ போழ்ந்த புனிதனிடம்‌ நின்ற செந்தி மொண்டு சூறை நீள்‌ விசும்பு ஊடிரிய சிங்கவேழ்‌ ? சிங்கவேழ்‌ ! சிங்கவேழ்‌ ! எவ்வும்‌ சிங்கவேழ்‌ சென்று காண்டற்கரிய கோயில்‌ சிங்கவேள்‌ குன்றமே

1013

எரிந்த பைங்கண்‌ இலங்கு பேழ்‌ வாய்‌ எயிற்றொடு இது எவ்வுருவென்று இரிந்து வானோர்‌ கலங்கி ஓட இருந்த அம்மானதிடம்‌ நெரிந்த வேயின்‌ முழையுள்‌ நின்று நீள்‌ நெறிவாய்‌ உழுவை திரிந்த ஆனைச்‌ சுவடு பார்க்கும்‌ சிங்கவேள்‌ குன்றமே

1014

முனைத்த சீற்றம்‌ விண்‌ சுடப்‌ போய்‌ மூவுலகும்‌ பிறவும்‌ அனைத்தும்‌ அஞ்ச ஆளரியாய்‌ இருந்த அம்மானதிடம்‌ கனைத்த தீயும்‌ கல்லும்‌ அல்லா வில்லுடை வேடருமாய்‌ தினைத்தனையும்‌ செல்ல ஒண்ணாச்‌ சிங்கவேள்‌ குன்றமே

1015

நாத்தழும்ப நான்முகனும்‌ ஈசனுமாய்‌ முறையால்‌ ஏத்த அங்கோர்‌ ஆளரியாய்‌ இருந்த அம்மானதிடம்‌ காய்த்த வாகை நெற்றொலிப்பக்‌ கல்லதர்‌ வேய்ங்கழை போய்‌ தேய்த்த தீயால்‌ விண்‌ சிவக்கும்‌ சிங்கவே1ள்‌' குன்றமே

1016

நல்லை நெஞ்சே! நாம்‌ தொழுதும்‌ நம்முடை நம்பெருமான்‌ அல்லி மாதர்‌ புல்க நின்ற ஆயிரந்தோளனிடம்‌ நெல்லி மல்கிக்‌ கல்லுடைப்பப்‌ புல்லிலை ஆர்த்து அதர்வாய்ச்‌ சில்லு சில்லென்றொல்லறாத சிங்கவேள்‌ குன்றமே

1017

செங்கணாளி இட்டிறைஞ்சும்‌ சிங்கவேள்‌! குன்றுடைய எங்கள்‌ ஈசன்‌ எம்பிரானை இருந்தமிழ்‌ நூற்புலவன்‌ மங்கையாளன்‌ மன்னு தொல்‌ சீர்‌ வண்டறை தார்க்‌ கலியன்‌ செங்கையாளன்‌ செஞ்சொல்‌ மாலை வல்லவர்‌ தீதிலரே

அடிவரவு: அங்கண்‌ அலைத்த ஏய்ந்த எவ்வம்‌ மென்ற எரிந்த முனைத்த நா நல்லை செங்கண்‌ கொங்கு