Skip to the text
பெரிய திருமொழி

1-6. வாணிலா முறுவல்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

பெண்களின் அழகில் மயங்கி வாழ்நாளைக் கழித்ததை ஆழ்வார் ஒப்புக்கொள்ளும் பதிகம். "பேதையேன்" என்று தன்னைத் தானே இகழ்ந்து, அத்தவறை உணர்ந்த பின் இறைவனை நோக்கித் திரும்பியதைச் சொல்கிறார். தன் குற்றத்தை மறைக்காமல் சொல்லும் நேர்மையே திருமங்கையாழ்வாரின் தனிக்குரல்.

பெரிய திருமொழி 1-6 - வாணிலா முறுவல்‌ (நைமிசாரணியம்‌)

998

வாணிலா முறுவல்‌ சிறுநுதல்‌ பெருந்தோள்‌ மாதரார்‌ வனமுலைப்‌ பயனே பேணினேன்‌ அதனைப்‌ பிழை எனக்‌ கருதிப்‌ பேதையேன்‌ பிறவி நோய்‌ - அறுப்பான்‌ ஏணிலேன்‌ இருந்தேன்‌ எண்ணினேன்‌ எண்ணி இளையவர்‌ கலவியின்‌ - திறத்தை நாணினேன்‌ வந்து உன்‌ திருவடி அடைந்தேன்‌ நைமிசாரணியத்துள்‌ - எந்தாய்‌!

999

சிலம்படி உருவிற்‌ கருநெடுங்கண்ணார்‌ திறத்தனாய்‌ அறத்தையே மறந்து புலம்படிந்துண்ணும்‌ போகமே பெருக்கிப்‌ போக்கினேன்‌ பொழுதினை - வாளா ர்‌ அலம்புரி தடக்கை ஆயனே! மாயா! வானவர்க்கு அரசனே! வானோர்‌ நலம்‌ புரிந்து இறைஞ்சும்‌ திருவடி அடைந்தேன்‌ நைமிசாரணியத்துள்‌ - எந்தாய்‌!

1000

சூதினைப்‌ பெருக்கிக்‌ களவினைத்‌ துணிந்து சுரிகுழல்‌ மடந்தையர்‌ திறத்து காதலே மிகுத்துக்‌ கண்டவா திரிந்த தொண்டனேன்‌ நமன்‌ தமர்‌ செய்யும்‌ வேதனைக்கு ஜஓ௫டங்கி நடுங்கினேன்‌ வேலை வெண்திரை அலமரக்‌ கடைந்த நாதனே! வந்து உன்‌ திருவடி அடைந்தேன்‌ நைமிசாரணியத்துள்‌ - எந்தாய்‌!

1001

வம்புலாம்‌ கூந்தல்‌ மனைவியைத்‌ துறந்து பிறர்‌ பொருள்‌ தாரம்‌ - என்றிவற்றை நம்பினார்‌ இறந்தால்‌ நமன்‌ தமர்‌ பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால்‌ இயன்ற பாவையைப்‌ பாவீ! தழுவென மொழிவதற்கு அஞ்சி நம்பனே! வந்து உன்‌ திருவடி அடைந்தேன்‌ நைமிசாரணியத்துள்‌ - எந்தாய்‌!

1002

இடும்பையால்‌ அடர்ப்புண்டு இடுமினோதுற்றென்று இரந்தவர்க்கு - இல்லையே என்று நெடுஞ்சொலால்‌ மறுத்த நீசனேன்‌ அந்தோ! நினைக்கிலேன்‌ வினைப்‌ - பயன்‌ தன்னை கடுஞ்சொலார்‌ கடியார்‌ காலனார்‌ தமரால்‌ படுவதோர்‌ கொடுமிறைக்கு - அஞ்சி நடூங்கி நான்‌ வந்து உன்‌ திருவடி அடைந்தேன்‌ நைமிசாரணியத்துள்‌ - எந்தாய்‌!

1003

கோடிய மனத்தால்‌ சினத்தொழில்‌ புரிந்து திரிந்து நாய்‌ இனத்தொடும்‌ திளைத்திட்டு ஓடியும்‌ உழன்றும்‌ உயிர்களே கொன்றேன்‌ உணர்விலேன்‌ ஆதலால்‌ - நமனார்‌ பாடியைப்‌ பெரிதும்‌ பரிசழித்திட்டேன்‌ பரமனே! பாற்கடல்‌ கிடந்தாய்‌! நாடி நான்‌ வந்து உன்‌ திருவடி அடைந்தேன்‌ நைமிசாரணியத்துள்‌ - எந்தாய்‌!

1004

நெஞ்சினால்‌ நினைந்தும்‌ வாயினால்‌ மொழிந்தும்‌ நீதி அல்லாதன - செய்தும்‌ துஞ்சினார்‌ செல்லும்‌ தொல்நெறி கேட்டே துளங்கினேன்‌ விளங்கனி - முனிந்தாய்‌! வஞ்சனேன்‌ அடியேன்‌ நெஞ்சினில்‌ பிரியா வானவா! தானவர்க்கு என்றும்‌ நஞ்சனே! வந்து உன்‌ திருவடி அடைந்தேன்‌ நைமிசாரணியத்துள்‌ - எந்தாய்‌!

1005

ஏவினார்‌ கலியார்‌ நலிகவென்று என்‌ மேல்‌ எங்ஙனே வாழுமாறு? ஐவர்‌ கோவினார்‌ செய்யும்‌ கொடுமையை மடித்தேன்‌ குறுங்குடி நெடூங்கடல்‌ - வண்ணா! பாவினார்‌ இன்சொல்‌ பன்மலர்‌ கொண்டு உன்‌ பாதமே பரவி நான்‌ - பணிந்து என்‌ நாவினால்‌ வந்து உன்‌ திருவடி அடைந்தேன்‌ நைமிசாரணியத்துள்‌ - எந்தாய்‌!

1006

ஊனிடைச்‌ சுவர்‌ வைத்து என்பு தூண்‌ நாட்டி உரோமம்‌ வேய்ந்து - ஒன்பது வாசல்‌ தானுடைக்‌ குரம்பை பிரியும்‌ போது உன்தன்‌ சரணமே சரணம்‌ என்று - இருந்தேன்‌ தேனுடைக்‌ கமலத்‌ திருவினுக்கு அரசே! திரை கொள்‌ மாநெடூங்கடல்‌ - கிடந்தாய்‌! நானுடைத்‌ தவத்தால்‌ திருவடி அடைந்தேன்‌ நைமிசாரணியத்துள்‌ - எந்தாய்‌!

1007

ஏதம்‌ வந்து அணுகா வண்ணம்‌ நாம்‌ எண்ணி எழுமினோ தொழுதும்‌ - என்று இமையோர்‌ நாதன்‌ வந்து இறைஞ்சும்‌ நைமிசாரணியத்து எந்தையைச்‌ சிந்தையுள்‌ - ஊனுடை வைத்து ர்‌ காதலே மிகுத்த கலியன்‌ வாயொலி செய்‌ மாலை தான்‌ கற்று வல்லார்கள்‌ ஓதநீர்‌ வையகம்‌ ஆண்டு வெண்குடைக்‌ கீழ்‌ உம்பரும்‌ ஆகுவர்‌ - தாமே

அடிவரவு: வாணிலா சிலம்பு சூதினை வம்பு இடும்பையால்‌ கோடிய நெஞ்சினால்‌ ஏவினார்‌ ஊன்‌ ஏதம்‌ அங்கண்‌